தாயகத்து உறவுகளை தலைநிமிர வைப்போம்-
பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் ரி.ஆர்.ரி தழிழ் வானொலியின் அனுசரனைக்கூடாக வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயகத்து உறவுகளைத் தலை நிமிர வைப்போம் என்ற செயல் திட்டத்தில் குறித்த வானொலிக்கூடாக இணைந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி. லாலாரவி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியூடாக வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வட்டு கிழக்கு சித்தன்கேணியில் வசிக்கும் திருமதி.பி.சந்திரமாலா என்ற போரில் மிகக்கடுமையான பாதிப்புக்களோடு வாழும் பெண்ணுக்கு அவரது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு கூரைத்தகடுகள், கம்பிவலைகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் 30.05.2015 அன்று குறித்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று வழங்கி வைத்தார். குறித்த பெண்மணி தற்போது மேற்படி வீட்டில் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்.