Header image alt text

வவுனியா நொச்சிக்குளம் வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா-

dfddவவுனியா நொச்சிக்குளம் இல.01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் பெற்றோர் தின விழா நேற்று (28.05) வித்தியாலய மண்டபத்தில் அதிபர் திரு க.ஜெயகுமார் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் முதன்மை அதிதியாக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் திரு வ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் இந்நிகழ்வின்போது மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டங்கள்-

dgfgfgggggயாழ். புங்குடுதீவு மாணவியை படுகொலை புரிந்தவர்களுக்கு விரைவில் நீதி வழங்கக்கோரி பாரிய கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று அம்பாறை, திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் வர்த்த நிலையங்கள், வங்கிகள் பிரதேச மகளிர் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்ததுடன், திருக்கோவில் பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், விநாயகபும் சக்தி வித்தியாலய உயர்தர மாணவ, மாணவிகள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் திருக்கோவில் பிரதேச மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருக்கோவில்; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து, புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை தொடர்பில் அடையாள அணிவகுப்பு-

courtsகிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் 7வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 15 வயதுச் சிறுவனை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான சிறுவன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றையதினம் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரான சிறுவனை பொலிஸார் நேற்று கைதுசெய்தனர். யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம், சிறுமி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கஹாவத்தை இரட்டைக் கொலை வழக்கில் மூவர் விடுதலை-

ratnapura mum and daugterகஹாவத்தை, கொட்டஹதென்ன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என இன்று தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம்; அந்த மூவரையும் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகாத தென்னகோன், அந்த மூவர்மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதனால் அந்த மூவரையும் நிரபராதிகளாக விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய எல்.ஜீ.பிரேமவதி மற்றும் அவரது மகள் எச்.ஜீ.புஸ்பகுமாரி (வயது 23), ஆகிய இருவரும் கடந்த 2012 ஜூலை 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். குறித்த இரு பெண்களையும் கொலை செய்துவிட்டு அவர்களின் சடலங்களை எரியூட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் சமிந்த சில்வா, சிசிர குமார மற்றும் எல்.ஜீ.மித்தில ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, குற்றத்தை செய்வதற்கு உதவியவரின் சாட்சி, முன்னுக்கு பின் முரணானது. குற்றத்தை செய்வதற்கு உதவியவர் அரச சாட்சியாக மாற்றப்பட்டதன் பின்னர் அவரால் அளிக்கப்பட்ட சாட்சி முன்னுக்கு பின் முரணாகியமை, சாட்சியாளர்களின் அவநம்பிக்கையான சாட்சிகளின் பேரில் பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்குவது அபயகரமான நிலைமை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உடுவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)

uduvil sports  (4)யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 ஆனது உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் நேற்று (26.05.2015) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு.பிரகாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பின்னர் போட்டிகளிலே வெற்றியீட்டியவர்களுக்கு கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசில்களை வழங்கினார்கள். இவ்விழாவில் வலிதெற்கு பிரதேச சபை அங்கத்தவர்கள், உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அரச அதிகாரிகள், ஊர்ப் பெரியோர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

இந்தியாவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

ereஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயில் மற்றும் வெப்ப காற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் 852 பேரும், தெலுங்கானாவில் 266 பேரும் பலியாகி உள்ளனர். 

மார்ச் மாதம் துவங்கி மே 2வது வாரம் வரை பருவம் தவறி மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், கோடை வெயிலில் இருந்து தப்பித்தோம் என நாடு முழுவதிலும் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். மழை ஓய்ந்ததும் கடுமையான வெயில் தாக்க துவங்கியது. இந்த மாறுபட்ட தட்டவெப்ப நிலையை தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். 

வெயிலுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பல பகுதிகளில் அரசு சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் எளிமையான ஆடைகளையே உடுத்த வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அநாவசியமாக வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தூய்மையான குடிநீரை அதிகளவில் உட்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.  

அதிக பட்சமாக ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னையில் 109 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. ஆந்திரா, ஒடிசா ஆகிய மரிலங்களில் வெயிலின் தீவிரம் அதிகமாக காணப்படுவதுடன், அனல்காற்றும் வீசி வருகிறது. இதனால் அடுத்த வரும் நாட்களில் வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பார்வையற்றோர்க்கான விசேட நூலகம் திறந்து வைப்பு-

uiuuuயாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் அனுசரணையில் யாழ். பொது நூலகத்தில் பார்வையற்றவர்களுக்கான விசேட நூலக அலகு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக பார்வையற்றவர்களுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தனர். யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் அற்புதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகரசபை ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வித்யாவிற்காக தொடரும் போராட்டங்கள்-

vidyaயாழ் புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினமும் சில பகுதிகளில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மாணவியை நினைவுகூறும் வகையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இன்று முற்பகல் மௌன அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, மூதூர் பாரதிபுரம் பெண்கள் அமைப்பினரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து வித்தியாவுக்காக இன்று பேரணியில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் வித்தியாலய மாணவர்களும் இன்றுகாலை அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதேவேளை, மாணவியின் கொலையை கண்டித்து தோப்பூர் பகுதியிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சச்சிதானந்தம் கொல்லப்பட்டதை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்-

gggசமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புப் தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூகசேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆயுதகலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டுபிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நீதியினை நிலைநாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்; கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் நியமனம்-

ilanchliyanயாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். யூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலைவழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார். அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான கொடுமையான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் இளஞ்செழியன் கடமையாற்றினார். அதனையடுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார். Read more

இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவின் மூன்றாம்நாள் விழா-

25.05.2015 (4)யாழ். இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று (25.05.2015) திங்கட்கிழமை மாலை 3மணியளவில் இணுவில் இந்துக்கல்லூரி முன்றல். அமரர் சுந்தரலிங்கம் அரங்கில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் செல்வத்தான் அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. சு.சண்முககுலகுமாரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர், உடுவில்), திரு. சு.தேவமனோகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வில் வரவேற்புரையினை பிரதி அதிபர் திருமதி த.தேவகரன் அவர்களும், வாழ்த்துரையினை திரு. குபேரநாதன் அவர்களும் ஆற்றினார்கள். தொடர்ந்து இணுவில் இந்துக் கல்லூரி, இணுவில் மத்திய கல்லூரி, ராமநாதன் கல்லூரி மற்றும் இணுவில் இந்து இளைஞர் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாணவ மாணவிகளது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர் சசிதரன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்தார்.

Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

president to jaffnaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் அரசாங்க உயரதிகாரிகள் சிலரும் அங்கு சென்றுள்ளனர். யாழ். மாநகரசபை மைதானத்திற்கு வந்திறங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றார். மேலும், யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகள் மற்றும் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் நேரடியாக ஆராயும் பொருட்டு ஜனாதிபதி தலைமையிலான சந்திப்பொன்றும் யாழில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் வட மாகாண ஆளுனர் மற்றும் காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்துள்ளனர். இதேவேளை புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார். இன்று யாழ். வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை-

mallagam courtsயாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதித்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் பேச்சாளர் காரியாலயாலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவில் மாணவியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன. இதற்கமைய பொலிஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெயரிடப்பட்ட அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள்-

parliamentஅரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதன்படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவகவும் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஆர்.சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார். மேலும் அரசியல் சாராத மூவரும் இக் குழுவில் அடங்குகின்றனர். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இந்த சபையின் அதிகாரபூர்வ உறுப்புரிமையை பெற்றவர்களாவர். அரசியலமைப்புச் சபையில் 10 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்.

ஞானசார தேரர் பிணையில் விடுதலை-

gnanasaraஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், நேற்று நாடு திரும்பியிருந்த நிலையில் இன்றுகாலை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அத்தே ஞானசார தேரரை, 5,000 ரூபாய் காசு பிணை மற்றும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், பிணையில் விடுவித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஞானசார தேரர் கலந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தமை தொடர்பில் அவர் இன்று கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதவான் ஞானசாரதேரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம்- 

ainkaranயாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதே சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் வழி நடத்தலில் தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் என்கின்ற செயல் திட்டத்தின்கீழ் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உதவித்திட்டங்களில் ஒன்றாக ஜேர்மனிய புலம்பெயர் உறவான திரு. செல்வதுரை. ஜெகநாதன் மற்றும் ஆறுமுகம் இராஜரட்ணம் ஆகியோரின் உதவித்திட்டத்தின் ஊடாக உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில் வாழுகின்ற பெண்ணைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு வீட்டின் சில பகுதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்த செயற்பாட்டினை வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு புனரமைப்பின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் சமூகசேவை உத்தியோகஸ்தர் பலி-

shotமட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் மண்டூரில் இன்றுகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகஸ்தர் ஒருவர் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்டூரிலுள்ள தனது வீட்டில் இருந்தபோது, சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற இந்த உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். உடனடியாகவே அவரை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது, அவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வலி மேற்கில் வித்தியாவுக்கு ஆதரவாக போராட்டங்கள்-

unnamedபுங்குடுதீவில் இடம்பெற்ற கூட்டு வன்கொடுரத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்துள்ளது. மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை மாணவர்கள் விததியாவுக்கு இதய அஞ்லியினை செலுத்தியதோடு நீதி வேண்டியும் மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பு வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் நிகழ்வின்போது வலமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்துகொண்டு வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தேசிய நிறைவேற்று சபையில் ஜே.வி.பி பங்கேற்காது-அனுரகுமார-

anura kumaraஇனிவரும் காலத்தில் தேசிய நிறைவேற்று சபையில் தமது கட்சி பங்குபற்றாது என ஜே வி பி தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் திகதிக்கு பின்னர் தேசிய நிறைவேற்றுச் சபை கூடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை முன்னாள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனையை அமுல்செய்ய நடவடிக்கை-

wijayadasa rajapakseநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் காரணமாக மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தற்போது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறு பொதுமக்கள் பாரியளவில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அமுல்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

மருதானை தீவிபத்தில் ஐவர் உயிரிழப்பு-

burnமருதானை எல்பின்ஸ்டன் திரையரங்குக்கு அருகில் உள்ள வெதுப்பக மொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு வாகனங்கள் ஆறு பயன்படுத்தப்பட்டன. சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொத்து ரொட்டி தயாரிப்பதற்காக பயன்படுத்தும் அடுப்புக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் வெடித்ததினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீயையடுத்து கிளம்பிய புகையை உள்ளிழுக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்த வெதுப்பகம் 5 மாடிகளை கொண்டது என்றும் ஐந்து மாடிகளுக்கும் தீ பரவியிருந்தது. இந்த வெதுப்பகத்துக்கு முன்பாக இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

வலி மேற்கு முன்பள்ளிகளுக்கு வேள்ட் விசன் நிறுவனம் உதவி-

ainkaranயாழ். வலி மேற்கு பிரதேச சபைக் கலாச்சார மண்டபத்தில் வேள்ட் விசன் நிறுவன அபிவிருத்தி வளவாளர் வி.வெஞ்சஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 22.05.2015 அன்று வலிகாமம் வலயக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக சங்கானைக் கோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகட்கு சிறுவர் நூல்கள் உள்ளக விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை உதவிப் பிரதேசசெயலர் திருமதி. அ.செந்தூரன், சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. ஏ.எஸ்.மரியாம்பிள்ளை, வலி மேற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி. சாரதா. உருத்திரசாம்பவன், வேள்விசன் முகாமையாளர் திரு.ஐ.மைக்கல், சங்கானை பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிபபாளர் வீ.சிவகுமார், வலிகாமம் வலய ஆரம்ப முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. ரூபா உதயரட்ணம், சங்கானை பிரதேச செயலக ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி. சி.ஜெயதுர்க்கா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Read more

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தின் 33வது ஆண்டு விழா நிறைவு நாள்-

ssssssssயாழ். சுழிபுரம் பாரதி கலைமண்றத்தின் 33வது ஆண்டு விழா நேற்று (24.05.2015) சுப்பையா அரங்கு வளாகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாரதி கலை மன்ற தலைவர் த.விமல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் அவர்களும் சங்கானை பிரதேச செயலக கலாச்சார உத்தியேகஸ்தர் திருமதி.நிருபா காசிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினராக சுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் திரு.சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு.வி.சிவராமன், மற்றும் சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வின் ஆசியுரையினை சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு கமலராஜ் சர்மா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) மாணவர்களுக்காண கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமண்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நாடகங்கள் மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த கலைஞரால் அபிநய நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more

உயிர்நீத்தோர் நினைவாக வன்னியில் உதவிகள் வழங்கிவைப்பு-

3rd photoபிரான்ஸில் வசிக்கும் தாமோதரம்பிள்ளை வரதராஜா குடும்பத்தினர் கடந்த 1985;ம் ஆண்டு திருகோணமலை பன்குளத்தில் வைத்து காடையர்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது தாய் மற்றும் சகோதரங்களான தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை, தா.பரமேஸ்வரி, தா.புவனேஸ்வரி(மதி), யோகநாதன், ஜெயபாலன் ஆகியோரது 30ஆம் ஆண்டு நினைவாக வன்னியிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். இந்த உதவிகள் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. க.சிவநேசன் (பவன்) அவர்களின் ஊடாக நேற்று(24.05.2015) வழங்கிவைக்கப்பட்டது. இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கோழி வளர்ப்பிற்கென 10ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டது. இப்பெண்ணின் கணவர் இன்றுவரை தடுப்புமுகாமில் உள்ளார். மேலும் யுத்தத்தின்போது ஒரு காலினை இழந்து வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பெண்ணொருவருக்கு தன்னிடமுள்ள பணத்தையும் சேர்த்து மாடு வாங்கி வளர்ப்பதற்காக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயங்காத நிலையிலும் ஒரு கையினை இழந்த நிலையிலும் உள்ள ஒருவருக்கு மாடு வளர்ப்பிற்கென 20ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இவருடைய மனைவி இடுப்பின்கீழ் இயங்காத நிலையில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. Read more