சாரண சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரத்தினை சிறப்பிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். திரு சு.காண்டீபன்-

trtrrஇன்றையதினம் முதல் 2015ஆம் ஆண்டிற்கான சாரண சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. ஜூன் 5ல் இருந்து ஜூன் 15 வரை இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் நடைபெறவுள்ளதாக வவுனியா மாவட்ட ஊடக மற்றும் பொதுத் தொடர்புகள் பிரிவிற்கான உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரமானது இலங்கை சாரணர் தலைமைக்காரியலயத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு ஆகும். இது சாரணர்கள் ஆண்டுதோறும் தமது சாரணர் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் ஓர் உன்னத நிகழ்வாகும். நாடு பூராகவும் 37 சாரண நிர்வாக மாவட்டங்களில் 45000 க்கு மேற்பட்ட சாரணர்கள் இம்முறை தமது சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னெடுக்கவுள்ளனர். சாரண சிறார்கள் சாரண சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னிட்டு உங்கள் இல்லங்கள், தொழில் நிலையங்கள் நோக்கி சமூக உணர்வுடன் தமது வேலை வாரத்தினை மேற்கொள்ள வருகை தரவுள்ளார்கள்.

எனவே அவர்களை இன்முகத்தோடு வரவேற்று சிறார்களை நாளைய சமூகத்தின் தலைவர்களாக மிளிரவைக்க சாரணர் சங்கம் மக்களின் ஆதரவை வேண்டி நிற்கிறது இச் சாரணர் பொதுத்தொடர்புகள் வாரத்தின்மூலம் சாரணர்களின் திட்டமிடல், நேர முகாமைத்துவம், தலைமைத்துவம், சமூகப்புரிந்துணர்வு, உழைப்பின் மகத்துவம் போன்றவற்றை எதிர் பார்த்தே உங்களை நாடி சாரணர்கள் வருகைதரவுள்ளமை சிறப்பம்சமாகும். இவர்களின் இலக்குகள் வெற்றியடைய தங்களின் முழு ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தங்களை நாடிவரும் சிறார்களுக்கு ஆபத்து விளைவிக்கின்ற பாரதூரமான வேலைகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்வதுடன், உழைப்பிற்கு பொருத்தமான சன்மானத்தை வழங்கி சாரண சிறார்களை ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இவ்வருடம் மக்கள் வங்கி சாரணர் சேவை மற்றும் பொதுத் தொடர்புகள் வாரத்தின் அதிகாரப்பூர்வ வேலை அட்டைக்கு அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரு சு.காண்டீபன்,
ஊடக மற்றும் பொதுத்தொடர்புகளுக்கான சாரண உதவி மாவட்ட ஆணையாளர், வவுனியா.