போதைப் பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்குவோம்.! வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி-

unnamed (1)வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் நேற்று (04.05.2015) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் பேரணி அரச பேரூந்துநிலைய சுற்றுவட்டம் ஊடான மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி பசார் நிலைய வீதி வழியாக வவுனியா பிரதேச செயலகத்தை அடைந்தது. இப் பேரணியில் போதைப் பொட்கள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடக்கிய பதாதைகள் மற்றும் சிகரட்உரு பதாதையை பாடையில் ஏற்றி சாவு ஊர்வலம் போல் வெடிகள் கொழுத்திய நிலையில் பேரணி வவனியா பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. அதேவேளை மது விற்பனை நிலையங்கள், கள்ளத் தவறணைகளுக்கான அனுமதி பத்திரங்களை எதிர்காலத்தில் தடை செய்யவேண்டும்,இருக்கும் மது விற்பனை நிலையங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், போதை வஸ்தால் விளைவிக்கப்படும் குற்றங்களுக்கு சட்டங்கள் இறுக்கமாக்கப்பட வேண்டும், மாணவர்கள் மத்தியில் வையூட்டப்பட்ட போதைப்பாக்கு உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மது விற்பனை நிலையங்களின் திறக்கும் நேரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும், போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வவனியா உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்

இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் பாடசாலை மாணவர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடங்களான நூற்றுக்கணக்கானேர் கலந்துகொண்டு போதைப் பொருளுக்கு எதிராக தமது முழுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் அதேவேளை போதைவஸ்து தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டு போதைவஸ்து தொடரபான முழுமையான விழிப்புணர்வு ஊர்வலமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.