தியாகி பொன்.சிவகுமாரனின் 41ம்வருட நினைவுதினம்-

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 41ம் வருட நினைவுதினம் நேற்று (05.06.2015) ஆகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார்.

வில்பத்து மீள்குடியேற்றம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு-

adssவில்பத்து சரணாலயத்துக்கு அருகில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் தொடர்பாக சுற்றாடல் அமைப்புகள் தயாரித்த அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நேற்று கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்றிரவு சுற்றாடல் அமைப்பு இந்த அறிக்கையை கையளித்துள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக தாம் பலதரப்பினரிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் அவற்றை துரிதமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வறிக்கைகள் கிடைத்த பின்னர் வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சாவகச்சேரியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு-

dead.bodyயாழ். சாவகச்சேரி இல்லாரையிலிருந்து எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரட்ணம் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்காடு கடற்கரையில் வயோதிப மாதுவின் சடலம் மீட்பு-

bodyமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு கடற்கரையில் இன்றுகாலை 8.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் களுதாவளையைச் சேந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என்பவருடையதென கணவரால் அடையாளம் காணப்பட்டது. குறித்த பெண், நேற்று இரவிலிருந்து காணமற்போயிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரால் அப்பெண் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எகெலியகொட விபத்தில் நால்வர் உயரிழப்பு-

accidentஇரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியின் எகெலியகொட பகுதியில் இன்று காலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, கொழும்பிலிருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பஸ்ஸ{டன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 18 வயதான இருவர் மற்றும் 16 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 29 வயதான ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு-

suicideகிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் (சொகோ) மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஐ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். களுதாவளை மாவடி வீதியைச் சோந்த 25வயதான குணரத்தினம் வதனா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.