ஜனாதிபதி பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு-

4544544இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அலரிமாளிகையில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் தேசிய மற்றும் வலய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நட்பு அரசுகள் இரண்டு என்றவகையில் எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக மாற்றியமைத்து கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷரீபினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யு.பீ. பஸ்நாயக்க, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் கிஷாந்த டி சில்வா ஆகியோரும் இலங்கை வந்துள்ள பாகிஸ்தான இராணுவ குழுவும் பங்கேற்றிருந்தது.

கோட்டாபயவின் மனுமீது விசாரணை, பசிலின் பிணைமனு பரிசீலனை-

gotabaya......தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்றுபிற்பகல் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் அபா ஆகியோர் முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருந்தது. இதேவேளை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியுமான பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை ஜூன் 15ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் முன்னிலையில் வந்தபோதே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆனைக்கோட்டையில் பஸ் மோதி குடும்பஸ்தர் பலி-

accidentயாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை சாவற்காட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளியான எஸ்.நாதன் (வயது38) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். பஸ் மோதியதில் இவர் அருகில் உள்ள மதவினுள் தூக்கி எறியப்பட்டார் எனவும், மோதிய பஸ் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் சிக்கியவர் பொதுமக்களால் யாழ்; போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபத்தில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்-

granadeபுத்தளம் மாவட்டம் சிலாபம், காக்கைப்பள்ளி, தெமடபிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.10 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த கைக்குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தை அடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற விசாரணை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை

யாழ். நீதிமன்ற தாக்குதல் விவகாரம், 34 பேருக்கு பிணை-

jaffna courtsயாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைத செய்யப்பட்டவர்களில் ஒரு குழுவினருக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 3வது பிரிவில் 34பேர் இன்றையதினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைவருக்கும் தலா 2லட்சம் ரூபா சரீரபிணை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த குழுவில் 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, அவர்கள் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டி.வி உபுலிடம் வாக்குமூலம் பதிவு-

upulவாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தென் மாகாண சபை அமைச்சர் டி.வி உபுல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்பில் அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து விசாரிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட அரச அதிபர் கனேடிய ஆலோசகர் சந்திப்பு-

GAகனேடிய ஆலோசகர் ஜெனிபர் ஹாட் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பு குறித்து தெரியவருவது, யாழ்.மாவட்டத்திற்கு ஏதேனும் தேவைப்பாடுகள் இருக்கின்றனவா எனவும், அவ்வாறு தேவைகள் ஏற்படின் தமது அரசால் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட அரச அதிபரிடம் கனேடிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமனம்-

asst judgeபதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்றுகாலை அவர் நியமினக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வெளிநாடு சென்றுள்ளதால் பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோனும் உடன் இருந்துள்ளார்

யாழ். தேசிய இளையுர் சேவைகள் மன்ற ஏற்பாட்டில் உதைபந்தாட்டப் போட்டி-(படங்கள் இணைப்பு)

P1030696யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவர் திரு. ச.லக்கன் அவர்களது தலைமையில் உதைபந்தாட்டப் போட்டி இடம்பெற்றது. மானிப்பாய் இந்துக்கல்லுரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. இதன்போது விளையாட்டு வீரர்களுக்கு விருந்தினர்கள் கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். பெருமளவிலான இளைஞர்கள், யுவதிகள், ஊர்மக்கள் வருகை தந்து இப்போட்டியினை கண்டுகளித்தனர்.

fddd rtrtr