Header image alt text

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்பட வேண்டும்:-

Ilancheliyan-judgeயாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண  மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தி;ல் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அனைத்து நபர்களையும், உடனடியாகக் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்துமாறு இந்த உயரதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அண்மையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இரா. சம்பந்தன் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். இதன்போது இந்த புதிய திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு எத்தனை எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6மணிக்கு இந்தக் கூட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 20வது தேர்தல் சீர்திருத்தத்தை ஏற்றக்கொள்வதில்லை எதிர்ப்பது என ஏகமானதாக முடிவெடுத்ததாகவும். மேலும் த.தே.கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்குவது தொடர்பிலும் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படகின்றது.

வலி மேற்கில் 30 குடும்பங்கட்கு காணிகள் கிடைத்தது

P1040085அண்மையில் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் காணிகள் அற்ற 30 குடும்பங்கட்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ.திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் தலைமையில் இடம் பெற்றது. அராலியின் ஊரத்திப் பிரதேசத்தில் கடந்த 40 ஆண்டுகட்கு மேலாக சொந்த காணிகள் அற்ற நிலையில் 30 குடும்பங்கள் வழ்ந்து வந்தன. குறித்த இவ் நிலை காரணமாக அப் பகுதியில் வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு பல் வேறு உதவித்திட்ங்களும் மறுக்கப்பட்டிருந்தது. இவ் நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் அப் பகுதியில் இயங்கும் கிராம அமைப்புக்கள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி அவர்கட்கு தொவித்ததனைத் தொடாந்து அவர் அப் பகுதிக்கு நேரடியாக சென்று மக்களது நிலைகள் தொடர்பில் ஆராய்ந்து. உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய காணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக தவிசாரால் சங்கானைப் பகுதியிலும் காணிகள் பகிhந்து அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் செயலாளர் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சபையின் கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

basilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் காலம்  எதிர்வரும் 18ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் பசில் ராஜபக்ஸ மற்றும் நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரினதும் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழங்கப்படும்

courtsஹெரோயின் மோபின் அல்லது அபின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார், மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். 

போதைப் பொருளானது, சமூகத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் நியதிகளைத் தகர்த்தெறிந்து, ஒரு சமூகத்தையே அழிக்க வல்லது. அதன் காரணமாகவே. அத்தகைய தீய சக்தியைக் கொண்டுள்ள போதைப் பொருளை சிறிய அளவில்தானும், உடைமையில் வைத்திருப்பதும், அதனை விற்பனை செய்வதும், பாரதூரமான குற்றமாகக் கருதி தண்டனை விதிக்கும் வகையில் போதைவஸ்து கட்டளைச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார். Read more