ஜனாதிபதி ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமிப்பு

jaradna radnasriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இன்று  காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க  மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நாடு அபிவிருத்திக் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கின்ற அதேவேளை மறுபுறத்தில குற்றச் செயல்களும் அதிகரித்துச் செல்கின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு புதிய கோணத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென்று சிரேஷ்ட அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க இன்று சபையில் தெரிவித்தார்

பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் ஜனாதிபதி

maithriபொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல்களை இலக்கு வைத்து அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சேவையின் போது எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி, நிற மற்றும் இன,மத பேதங்கள் பார்க்கப்படாது எனவும், நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவையின் போது அரசியல்வாதிகளும்  அரசாங்க அதிகாரிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று குறைகள் கண்டறியப்பட்டு தீர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

தற்போதைய பாராளுமன்றம் பிரதமரை மாற்றுவதற்கு அதிகாரமற்றது – பிரதமர் ரணில்

Ranilதற்போதைய பாராளுமன்றின் ஊடாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய முடியாது எனவும் அதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதாகவும், மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்ட பாராளுமன்றினையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
இந்தப் பாராளுமன்றின் ஊடாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய முயற்சித்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்பட வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தம்மை அவர் பிரதமராக தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் மக்களின் முன் சென்றே மாற்றம் செய்யப்பட வேண்டும். 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான பிரேரணையை கைவிட வேண்டும் என ஜனாதிபதி கூறவில்லை

maithri-ranil-rajithaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  செயற்பாட்டை கைவிடுமாறு   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருபோதும் அறிவுறுத்தல் விடுக்கவில்லை. அவ்வாறு ஜனாதிபதிக்கு கூறவும் முடியாது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்

மியன்மார்: கொகாங்க் ஆயுதக்குழு போர்நிறுத்தம்

miyanmar rebelsமியன்மாரின் அரச படைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் கோகாங்க் பிராந்திய ஆயுதக்கிளர்ச்சியாளர்கள் தன்னிச்சையான போர்நிறுத்த அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.
இனரீதியாக, சீனர்களான இந்த ஆயுதக்குழுவினர் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் மியன்மாரின் தேசியத் தேர்தலில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மியன்மார் சீன எல்லைப்பிராந்தியத்தில் இந்த ஆயுதக்குழுவுக்கும் மியன்மார் அரச படைகளுக்கும் இடையில் கடந்த பலமாதங்களாக கடுமையான சண்டை நடந்து வந்தது.
மியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவின் போர் நிறுத்த அறிவிப்புமியன்மாரின் கொகாங்க் ஆயுதக்குழுவின் போர் நிறுத்த அறிவிப்பு
இந்த சண்டை சிலசமயம் எல்லைதாண்டி சீனாவுக்குள்ளும் சென்றதால் சீன அரசாங்கம் கோபமடைந்தது.
சீனாவிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்தே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக, கொகாங்கியர்கள் தெரிவித்துள்ளனர்