20 ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுசில்

susilமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்­தி­யதன் பின்னர் திருத்தங்களை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.

இலங்­கையின் வர­லாற்றின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதி­க­ரிப்­பது என்­பது பெரிய விட­ய­மல்ல. சனத்­தொகை வளர்ச்­சிக்­கேற்ப உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த யோச­னை­யினால் யாழ்ப்­பா­ணத்தின் உறுப்­பினர் தொகை குறை­வ­டையும் அபாயம் உள்­ளது. அத்­தோடு மாத்­த­றை­யிலும் அந்த நிலை­மையே காணப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற ஊடகவி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

100 நாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக தேர்தல் முறைமை மறு­சீ­ர­மைப்­பி­னையும் உள்­ள­டக்­கு­மாறே அரசாங்கத்தி­டம கோரினோம். அதுவே மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட 100 நாள் வேலைத் திட்டத்­திலும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ளது. எனினும் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை.

எவ்­வா­றா­யினும் தேர்தல் மறு­சீ­ர­மைப்­பினை 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மாக பாரா­ளு­மன் றத்தில் சமர்­ப்பிக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்தார். இதன் படி தற்­போது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்டத்திற்கு தற்­போது அமைச்­ச­ர வையின் அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட யோசனை நிரா­க­ரிக்­கப்­பட்டுள்­ளது. மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக் கப்­பட்ட திருத்­தமே ஏற் றுக்­கொள்­ளப்­பட்டுள்ளது.

இதன்­ பி­ர­காரம் பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்­களின் எண்­ணிக்கை 225 ஆக திருத்­தப்­ –       பட்டுள்­ளது. இந்த திருத்­த­த்தினால் சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளுக்கும் சிறிய                     அர சியல்  கட்­சி­களுக்கும் பெரு­ம­ளவில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் மறு­சீ­ர­மைப்புக் குழு என்ற வகையில் அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் சிவில் அமைப் பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­னரே பாரா­ளு­மன்ற ஆச­னங்­களின் தொகையை 255 ஆக அதி­க­ரித்தோம்.

இருந்தபோதிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகை 255 ஆக மாற்றம் செய்­தமை         நாட் டுக்கு உகந்­த­தல்ல என ஐக்­கிய தேசியக் கட்சி வாதா­டு­கி­றது.அவ்­வா­றாயின் 1977 ஆம் ஆண்டு 170 ஆச­னங்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்களின் எண்­ணிக்­கையை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த்தன 225 ஆக அதி­க­ரித்தார்.

எனினும் அதன்போது எந்­த­வொரு எதிர்ப்பும் தெரி­விக்­க­வில்லை. இந்­நி­லையில் தற்­போது சனத்­தொ­கை­யா­னது இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. அவ்­வா­றாயின் அதற்­கேற்றால் போல் பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பினர் தொகையும் அதிக்­க­ரிக்­கப்பட வேண்டும்.

இதன்­ பி­ர­கா­ரமே அனைத்துக் கட்­சி­களின் ஆலோ­ச­னையை பெற்று 255 ஆக ஆச­னங்களின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்தோம். எனவே இன்று வெள்­ளிக்­கி­ழமை இது தொடர்பில் பங்கா­ளிக்­கட்­சி­க­ளுடன் விசேட பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். அதன் பின் இது குறித்தான திருத்­தங்­களை முன்­வைப்போம்.