Header image alt text

நேபாள நிலநடுக்கம்: மீட்புப்பணிகள் பாதிப்பு

nepalssssகிழக்கு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் மீட்புப்பணிகள் அங்கு பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் குறைந்தது 24 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டேப்பில்ஜங் மாவட்டத்தில், நிலச்சரிவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு கிராமங்களில் பலபேருடைய நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. அந்தப்பகுதியின் மலைப்பாங்கான நிலவியல் அமைப்பு காரணமாக அங்கே மீட்புப்பணியாளர்கள் சென்று சேர்வது கடினமானதாக இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதுஇந்த நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9000 பேர் பலியானார்கள். அதன் மோசமான பாதிப்புகளில் இருந்து அந்நாடு இன்னமும் முழுமையாக மீளாத நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

 

போரில் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு திறன் மிக்க செயற்கைக் கைகள்

artificial_arms artificial_arms1இலங்கையில் யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வொன்று முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (12.06.15) நடைபெற்றிருக்கின்றது.
ஆஸ்திரேலிய ரோட்டரிக் கழகத்தினர் யாழ்ப்பாணம் ரோட்டரிக் கழகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.
யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக இந்தத் திட்டத்தின் கீழ் கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக பலர் வருகை தந்திருந்தனர். முழங்கைக்குக் கீழ் கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முழங்கைக்குக் கீழ் நீண்டுள்ள கைப்பகுதியில் பட்டிகளைக் கொண்டு பொருத்தப்படுகின்ற இந்தக் கைகள் ரோபோக்களின் கைகளைப் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. Read more