நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்-ஐ.நா மனித உரிமை ஆணையாளர்-

al hussainஇலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என செய்ட் அல் ஹ_சைன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை-

vasமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய, குசலா சரோஜின் மற்றும் அமேந்திர சேனாரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழுவே இன்று இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது. ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன் பிணை நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரகசிய பொலிஸ_க்கு சமூகமளிக்கவேண்டும். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய ஐவரும் மேற்குறிப்பட்ட பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம் அதிகரிப்பு-

saudi head cutசவுதி அரேபியாவானது சிரிய நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கும், தனது நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் தலையை வெட்டி நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இவ்வருடத்தில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருட எண்ணிக்கையான 90ஐ மிஞ்சியுள்ளது. சிரியாவைச் சேர்ந்த இஸ்மாஹெல் அல்-தவ்ம் என்ற நபர் தடைசெய்யப்பட்ட எம்பெடமைன் வில்லைகளை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று தலைவெட்டி கொலைசெய்யப்பட்டார். சவுதியில் மரணதண்டனை அதிகளவில் நிறைவேற்றப்படுகின்றமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டில் அந்நாட்டில் 192 பேருக்கு தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அந்நாட்டில் வருடமொன்றில் நிறைவேற்றப்பட்ட அதிகப்படியான மரணதண்டனை எண்ணிக்கையாக உள்ளது. குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு தம்பக்க நியாயத்தை தெளிவுபடுத்த ஒழுங்காக வாய்ப்பு வழங்கப்படுவதில்லையென நீண்டநாட்களாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சவுதியின் நீதித்துறையின் செயற்பாடுகள்மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுதவிர சவுதி அரேபியாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுதல், ஒன்று கூடுதலுக்கான உரிமை மறுக்கப்படுதல், விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீதான கெடுபிடிகள் போன்றவற்றுக்கும் பல அமைப்புகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுதல்-

ravinatha ariyasingheஇலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடானது ஒரு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்போர் நாட்டில் இருந்து செல்வதற்கான ஆயத்தங்களை செய்யும் காலக்கட்டத்தில் ஒரு குறுகிய காலத்துக்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்றும் ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார். குடியேறிகள் தொடர்பான ஐ.நாவின் விசேட நிபுணர் பிரான்ஸிஸ் க்ரீபே அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கே இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் கூறும்போது ரவிநாத் ஆரியசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐ.நாவின் விசேட நிபுணர் தமது குற்றச்சாட்டில் இலங்கையில் வீசா ஒழுங்கு மீறல் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார். எனவே சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பிரச்சினை, குற்றமாக கருதப்படாது அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இதற்கு நேற்று ஜெனீவா நிகழ்வில் பதிலளித்துள்ள ரவிநாத் ஆரியசிங்க, சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனினும் அவர்கள் நாட்டிலிருந்து அனுப்பப்படும் வரை அவர்களின் பாதுகாப்பு கருதியே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயம்-

barack-obama_0அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான அரசாங்கத்தின் அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரென தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்தின் நல்லாட்சியை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவில்லையென்றும், பல நாடுகள் அரசாங்கத்துடன் எந்த விதமான தொடர்பாடுகளையும் கொண்டிருக்கவில்லையென்றும் எதிர்க்கட்சி அரசின் மீது குற்றம் சுமத்துகிறது. ஆனால் இக்குற்றச் சாட்டுக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது. கடந்த ஆட்சியாளர்கள்தான் சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையை தனிமைப்படுத்தியிருந்தனர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் வெளிநாடுகளுடனான நட்புறவு மேம்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வருட இறுதியில் இலங்கை வருகின்றார். இதற்கான இலங்கை அரசின் அழைப்பை ஒபாமா ஏற்றுள்ளார். இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஒபாமா மட்டுமல்ல பல சர்வதேச தலைவர்கள் இலங்கை வருவதற்காக வரிசையில் நிற்கின்றனர். எமது அரசையும் நல்லாட்சியையும் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால்தான் உலகின் மத்தியில் எமது நாடு இன்று தலை நிமிர்ந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலி மேற்கு சத்தியக்காட்டு வீதி திருத்தும் பணிகள்-

valiயாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக பழுதiடைந்த நிலையில் இருந்த சத்தியகாட்டு வீதி வலி மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீடு ரூபா.1000000 பணத்தில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மிக நீண்ட காலமாக மேற்படி வீதியைத் திருத்துவது தொடர்பில் பிரதேச மக்களால் கேரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களுடன் சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறித்த வீதியின் திருத்தவேலைகளை நேரில் பார்வையிட்டார்.