போதைவஸ்து வாள்வெட்டுக்களை தடுத்து நிறுத்துமாறு சுவரொட்டி மூலம் கோரிக்கை- புளொட்டின் ஏற்பாட்டில் வடக்கு முழுவதும் பிரச்சாரம்-
போதைவஸ்து வாள்வெட்டு போன்ற சம்பவங்களை உடன் தடுத்து நிறுத்துமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) கோரிக்கை விடுத்துள்ளது.
புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 31ஆவது நாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில்….
*அரசே, மாணவி வித்தியாவின் விடயத்தில் உடன் நீதியை நிலைநாட்டு!
*அரசே, போதைவஸ்து, வாள்வெட்டுக்களை உடன் தடுத்து நிறுத்து!!
*அரசே, மக்களை அச்சத்திலிருந்து விடுவித்து நிம்மதியாக வாழவிடு!!!
போன்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன.
குறித்த சுவரொட்டிகள் வடக்கு மாகாணம் முழுவதும் அரச அலுவலகங்களுக்கு முன்பாகவும், பொதுமக்கள் கூடும் சந்தை, வணக்க ஸ்தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு முன்பாக என்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
நன்றி, யாழ். தினக்குரல் 16.06.2015.