யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு, 36 பேருக்கு பிணை-

courtsயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைதான 36 பேருக்குப் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 36 சந்தேகநபர்களும் யாழ். நீதிமன்றத்தில் இன்று (ஆஜர்படுத்தப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாக இரு வழக்குகள் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. யாழ்.சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய வழக்கின் சந்தேகநபர்களையும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. பொலிஸ் காவலரண்மீது தாக்குதல் நடத்திய பிறிதொரு வழக்கின் சந்தேகநபர்களும் 5 லட்சம் ரூபா இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பிணையாளிகளும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சந்தேக நபர்கள் பிறிதொரு வழக்கில் கைசெய்யப்பட்டால் குறித்த பிணை ரத்துச் செய்யப்படும் எனவும் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கன் விமானசேவை விமானத்தில் பாதிப்பு-

sri lankan airlinesபிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்குள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 ஊழியர்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். வளிமண்டலத்தில் காணப்பட்ட மந்தநிலை காரணமாக விமானம் குழுங்கியதால் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று அதிகாலை 5.21 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அதன்பின்னர், விமானத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்கள், விமான நிலைய வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். ஏனைய நால்வரும், மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு வேட்பு மனு கிடையாது-அமைச்சர் ராஜித்த-

rajithaஎதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம்பெறப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்ததாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதேநேரம், பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் இல்லையென்றும் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார் என அமைச்சர் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார்.

வன்செயல்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸ் சைக்கிள் ரோந்து-

cycleயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை தடுக்கும் வகையில் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சைக்கிள் ரோந்து சேவையை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஆரம்பித்து வைத்தார். குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும், போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவற்றுடன் முக்கியமாக வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு மற்றும் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்பவர்களை கண்காணிக்கவும் இது குறித்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான பொலிஸாரின் சைக்கிள் ரோந்து சேவை மக்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாணவர்கள் தமது கல்வியை இடையூறு இல்லாமல் தொடர்வதற்கு வழிவகுக்கும் எனவும் பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்துள்ளார்.

வலளாய் மக்கள் மின்சாரமின்றி சிரமம்-

electricity 01யாழ். வலிகாமம் கிழக்கு வலளாய் பிரதேச மக்கள் தங்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் 113 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுள்; 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது தற்காலிக கொட்டில் அமைந்து தங்கியுள்ளனர். எனினும் மின்சார வசதி இல்hமையால் இரவு நேரங்களில் அச்சத்துடன் பொழுதை கழிக்கவேண்டியிருப்பதாக முறையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால மகிந்த சந்திப்புக்கு ஏற்பாடு-

Mahinda-Maithri-03ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் பிறிதொரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பொருட்டு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசேட குழு சந்திக்கவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மைத்திரி மகிந்த இணக்கப்பாட்டுக்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இதன்படி, அந்த குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. இச்சந்திப்பின் போது, எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலவையும், மகிந்த ராஜபக்ஸவையும் மீண்டும் சந்திக்க வைப்பது பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை – இந்திய மீனவர்கள் கூண்டு மீன்பிடித் திட்டம்-

fishஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்கள் கூண்டு மீன்பிடி வளர்ப்பு முறையை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வாகவே, கூண்டு மீன்பிடி முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதற்கமைய, ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு தமிழக அரசு 90வீத மானியத்தில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக 10 மீனவர்கள் தெரிவுசெய்யப்பட்டு 20 கூண்டுகளில் மீன்பிடிக்க தமிழக அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தங்கச்சி மடம் பகுதியிலுள்ள அந்தோனியார்புரம் கடற்கரையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டு, 5,000 மீன்குஞ்சுகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு, வளர்ப்புக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலிமுகத்திடல் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு-

openகாலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்திற் கொண்டு இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. புதிய சுற்றுவட்டம் நீர் அலங்காரம் மற்றும் மின் விளக்கு அலங்காரங்களால் அலங்கரிக்கப்ப்ட்டுள்ளதுடன் இவை இரவு நேரத்தில் ஒளிரவிடப்படவுள்ளது. இலங்கையின் அடையாளத்திற்கு இதுவும் ஒரு சின்னமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு-

land slideமலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலையகத்தில் அவ்வப்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பல வீதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்துடன் மக்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன. இன்றுகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. மழை பெய்து வருவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு டிக்கோய நகர சபையினரும் ஹட்டன் பொலிசாரும் கேட்டுள்ளனர்.

வடக்கில் மூடப்பட்ட இராணுவ முகாங்கள் பற்றிய தகவல்-

sl army2015 ஜனவரிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் எவ்வித இராணுவ முகாம்களும் மூடப்படவில்லை எனஇராணுவம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்குப் பின் வடக்கில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவலை இராணுவ தலைமையகம் முற்றாக நிராகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் வடக்கின் நிலைமைகளை கருத்திற்கொண்டு படையினர் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு வந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி கீழ் தேவை ஏற்பட்ட சிறிய முகாம்கள் சில மூடப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு 07 முகாம்களும், 2010ஆம் ஆண்டு 09 முகாம்களும், 2011ஆம் ஆண்டு 04 முகாம்களும், 2013இல் 17 முகாம்களும், 2014ஆம் ஆண்டு 24 முகாம்களும் மொத்தமாக 59 சிறிய முகாம்கள் மூடப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழில் போதைப்பொருள் வைத்திருந்த மாணவர்கள் மடக்கிப் பிடிப்பு-

arrest (2)யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மாவா என்ற போதைப் பொருளை பாடசாலையில் வைத்திருந்த 4 மாணவர்கள் தொடர்பில் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளுக்கு இரகசியமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் போதைப் பொருளை பாடசாலைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர்களை மடக்கி பிடித்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

வலி மேற்கில் விவசாயிகளுக்கு கருத்தமர்வு-

ainkaranயாழ். வலி மேற்கு பிரதேசத்திலுள்ள விவசாய சம்மேளனப் பிரதிதிநிதிகளுக்கான கருத்தமர்வு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் வேள்விசன் (சங்கானை) அனுசரனையுடன் வலி மேற்கு பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை நீர்ச் சபையின் இரசாயனப் பகுதி பணிப்பாளர் திரு.க.சரவணணன், யாழ் பல்கலைக்கழக சமூதாய மருத்துவத்துறைத் தலைவர் வைத்தியகலாநிதி. ச.சுரேஸ்குமார், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி. கைலேஸ்வரன் மற்றும் வேள்விசன் (சங்கானை) அபிவிருத்தி ஊக்குவிப்பாளர் தி.பிரியவக்சலன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, எமது பிரதேசம் பிரதானமாக விவசாயத்தினை அடிப்படையாக கொண்ட ஒர் பிரதேசம் ஆகும். காலம் காலமாக விவசாய சூழலில் பழக்கப்பட்ட நிலையில் வாழ்நது வந்தவர்கள் நாம். ஆயினும் அண்மைக்காலங்களாக விவசாயம் சார்பில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகப்பட்டுள்ளோம் இதன் தாக்கங்கள் சிறிது சிறிதாக தற்போது உணரப்பட்டும் வருகின்றது. இவ் நிலையில் நிலைத்து நிற்கும் விவசாயச் சூழலை உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது. 

இவ் நிலையில் இன்றைய விவசாயிகளின் விவசாய நிலை எதிர்காலத்தில் குறித்த விவசாய நிலையில் தொடர்ந்து பேணுவதற்குரிய நிலைமைகள் தற்போதய விவசாய முறைகளில் பயன்படுத்தும் கிருமிநாசினி மற்றும் இரசாயன வளமாக்கிகளால் ஏற்படும் தாக்கங்கள் எவ்வாறு வினைத்திறமையான விவசாய சூழலை உருவாக்க முடியும் போன்ற மிக முக்கியமான கருத்துரைகள் விவசாயிகட்கு வழங்குவதற்கு வளவாளர்கள் வருகை தந்துள்ளனர். இவ் நிலைகளை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் வினைத்திறமை மிக்க விவசாய சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நிலை உள்ளது.

விவசாயம் என்பது வர்த்தக ரீதியாக அண்மைக்காலங்களில் பெரும் சவாலை எதிர்நோக்கு கின்றது. தென்பகுதிப் பொருட்களுடன் போட்டி நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் மிகுந்த பாதக நிலையினை உருவாக்கி உள்ளது. இவ் விடயம் தொடர்பில் எமது முயற்சியினால் எமது வளங்களை அடிப்படையாக கொண்டு எமது நிலையில் உறுதிபெற முயற்சிக்க வேண்டும். இதற்கும் மேலாக குறித்த கருத்துப் பகிர்வுகளுக் கூடாக பெறப்படுகின்ற அறிவு சர் விடயங்கள் ஏனையவர்கட்கும் கடத்தப்பபட வேண்டும் இவ் செய்திகள் வெளியில் உள்ள ஏனையவர்கட்கும் பரவல் அடையும் போது அதனால் வினைத்திறமையான நிலைத்து நிற்கும் விவசாயச் சூழல் ஏற்பட வழி கிடைக்கும் என குறிப்பிட்டார்.

இலங்கை நீர்ச்சபையின் இரசாயனப் பகுதி பணிப்பாளர் திரு.க.சரவணணன்,அவர்கள் இரசாயன வளமாக்கிகள் மற்றும் கிருமிநாசினிகளின் பயன்பாடுகள் மேற்கௌள்ளும் தாக்கங்கள் மற்றும் நீர் வள முகாமைத்துவம் தொடர்பில் தனது கருத்துக்களை வழங்கினார்.
யாழ் பல்கலைக்கழக சமூதாய மருத்துவத்துறைத் தலைவர் வைத்தியகலாநிதி. ச.சுரேஸ்குமார், அவர்கள் விவசாய இரசாயணங்கள் உடலில் ஏற்படுத்தும் தக்கங்கள் மற்றும் அவற்றின் எதிர்கால விளைவுகள் தொடர்பில் தனது மருத்துவ ரீதியாக கருத்துக்களை முன்வைத்தார். தெர்ர்ந்து மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி. கைலேஸ்வரன் வினைத்திறன் மிக்க விவசாயம் தொடாபில் தனது கருத்துப் பகிர்வை மேற்கொண்டார்.

இவ் நிகழ்விற்கு அனுசரனை வழங்கி கலந்து கொண்ட வேள்விசன் (சங்கானை) அபிவிருத்தி ஊக்குவிப்பாளர் தி.பிரியவக்சலன் அவர்கள் குறிப்பிடுகையில் மேற்படி நிகழ்வு விவசாயிகளின் எதிர்கால உறுதித்தன்மையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இது ஒர் ஆரம்ப நிக்வாக மட்டுமே உள்ளது. இவ் விடயங்கள் விவசாயிகட்கு ஓர் விழிப்புணர்வு நடவடிக்கைக்காகவே மட்டும் உருவாக்கப்பட்டது; எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்கள் தொடர்பில் பல விடயங்களை ஆராய முடியும் என குறிப்பிட்டார்.