இலங்கைக்கான ஒன்பது வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்-

srilankaஇலங்கைக்கான ஒன்பது புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் விவரங்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உயர் பதவிகளுக்கான செயற்குழுவின் அங்கிகாரத்தை இவர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அவ்வமைச்சு, இவர்கள் விரைவில் தங்கள் பதவிகளை விரைவில் ஏற்றுக் கொள்ளவுள்ளார்கள் எனவும் அறிவித்துள்ளது. இதுவரை உறுதிசெய்யப்பட்டு, அனுமதிகளைப் பெற்றுள்ளவர்களின் விவரங்களை மட்டுமே வெளியிடும் ஆணையைப் பெற்றுள்ளதால், ஏனையோரின் விவரங்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். உறுதிப்படுத்தப்பட்டுள்ள தூதுவர்களின் விவரங்களும், அவர்கள் பணியாற்றவுள்ள நாடுகளும்:

ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜெகத் ஜெகசூரிய – பிரேசில்
வை.கே. றோஹண்அஜித் – ஈரான்
பி. செல்வராஜ் – இஸ்ரேல்
ஏ.எம்.ஜே.சதீஹ் – நெதர்லாந்து
ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஆர்.எம்.டி. ரத்னாயக்க – பாகிஸ்தான்
டபிள்யூ.எஃப். கருணாதாச – கட்டார்
திருமதி. ஆர்.டி.ராஜபக்ஷ – ஸ்வீடன்
திருமதி. ஷெனுகா செனவிரத்ன – தாய்லாந்து
திருமதி. எஸ்.எச்.யு. திசாநாயக்க – வியட்னாம்