ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் புதிய கடலை இனம் பயிரிடுகை-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் முல்லை ஒட்டு என்கின்ற புதிய சிறு கடலை இனம் ஒன்று இன்றையதினம் (25.06.2015) பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டு அதனுடைய விளைச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ க.சிவநேசன் (பவன்) அமைச்சரின் செயலாளர். விவசாய அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.