பண்ணையாளர்களின் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க கட்டிடம் திறப்பு-
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஐ.ஓ.எல் நிறுவத்தின் நிதியுதவியின்கீழ்; நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட பண்ணையாளர்களின் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்திற்கான களஞ்சியசாலை உள்ளிட்ட கட்டிடத்தின் திறப்புவிழா இன்று )25.06.2015)நடைபெற்றது. வட மகாhண விவசாய அமைச்சர் கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்கள் இக்கட்டிடத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசன் (பவன்), அமைச்சரின் செயலாளர், ஐ.ஓ.எம் நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி, சிக்கன கூட்டுறவு உதவி ஆணையாளர், சங்கத்தின் அதிகாரிகள், விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.