பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைகிறது-

parliamentநாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் அரச அச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த அறிவித்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலைக் கொண்ட வர்த்தமானி தற்சமயம் அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே, வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரை வேட்பு மனு கோரப்படவுள்ளது. இதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.