உடுவில் மல்லுவம் அண்ணா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுவிழா-2015
யாழ். உடுவில் மல்லுவம் அண்ணா சனசமூக நிலையமும், கோண்டாவில் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து நடாத்திய அண்ணா முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா 2015 நேற்று முன்தினம் (27.06.2015) சனசமூக நிலையத்; தலைவர் திரு. த.தினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். இணுவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ச.தேவகரன், பனை, தென்னைவள அபிவிருத்தக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றதுடன், பரிசில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.