Header image alt text

பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைகிறது-

parliamentநாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் அரச அச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த அறிவித்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலைக் கொண்ட வர்த்தமானி தற்சமயம் அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே, வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரை வேட்பு மனு கோரப்படவுள்ளது. இதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா நிகழ்வு-

YMHAயாழ். தெல்லிப்பளை இந்து இளைஞர் சங்கத்தின் பொன்விழா நிகழ்வு நாளையும் (27.06.2015) நாளை மறுதினமும் (28.06.2015) ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்றலில் நடைபெறவுள்ளது. இந்து இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வின் முதலாம் நாள் அமர்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் திரு அ.நடராஜன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தர்மகர்த்தாசபை தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அ.சண்முகதாஸ், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் திரு. ஆறு திருமுருகன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சிறீமோகன், வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு.சோ.சுகிர்தன், தெல்லிப்பளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திரு. கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். நாளை 27.06.2015 சனிக்கிழமை மாலை 2.30மணியளவில் ஆரம்பமாகும் இந்நிகழ்வுகளில் நாட்டியாஞ்சலி, சிவதாண்டவம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரி, பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

யாழ். நீதிமன்ற தாக்குதல், 14 பேர் பிணையில் விடுதலை-

courtsயாழ். நீதிமன்ற வளாகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களில் 14பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்தமைக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 பேர் இன்று நீதவான் பெருமாள் சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 14 பேரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நன்னடத்தை பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கினார். அத்துடன் எஞ்சிய 39 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா மீதான வன்கொடுமை படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி 135பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் சிலர் கட்டம் கட்டமாக நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால இந்திய முன்னாள் ஜனாதிபதி சந்திப்பு-

kalam and maithriஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் இடையே இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அலுவலகத்திலே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இன்று காலை ஆரம்பமாக சந்திப்பில் எதிர்வரும் தேர்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியருக்கு விளக்கமறியல்-

chavakachcheri courtsயாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமிகள் மூவரும், சிறுவர்கள் இருவருமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த ஆசிரியரைக் கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். அதன்போது குறித்த ஆசிரியரை எதிர்வரும் மாதம் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டுபாய் பயணித்த விமானம் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்-

emiratesஇயந்திர கோளாறு காரணமாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ_380 ரக பயணிகள் விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கிப் பறந்த விமானமொன்றே இலங்கையில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் பயணிகள் 510 பேர் இருந்ததாகவும் விமான நிலைய கடமைநேர முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஓய்வு-

mahindaதேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்குரிய கடமைகளை தாம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெறுவது தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை ஓய்வூதிய சம்பள திணைக்களத்திடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கையளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி தனித்து போட்டி, கரு போட்டியிட மாட்டார்-

sarathஎதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனநாயகக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கவென இந்நிகழ்வு இடம்பெற்றது. 10 அமைப்பாளர்கள் இதன்போது தெரிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற முயன்ற 78பேர் கைது-

boatசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றுகொண்டிருந்த 78 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் படகுமூலம் செல்லும் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கிரின்த கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை காலிதுறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை கஜமுகன் முன்பள்ளியின் விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

unnamed (2)யாழ். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மேலாண்மையுடனும் வழிகாட்டலுடனும் நடைபெற்றுவரும் கஜமுகன் முன்பள்ளியின் விளையாட்டு விழா வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது.

முன்பள்ளிக் கல்வி என்பது ஒவ்வோர் மாணவரின் கல்வியிலும் முக்கியம் பெறுகின்றது. இவ் கல்வியின் ஊடாகவே மணவர்கள் கல்வியில் விரும்பமும் ஆர்வமும் ஏற்பட ஆரம்பிக்கின்றது. இவ் கல்வி உரிய முறையில் வழங்கப்படுவது மிக முக்கியமான ஒன்றாகும் இவ் கல்வி முறையில் எமது பிரதேசத்தில் வளங்கள் காணப்பட்ட போதும் சில வசதியீனங்கள் கணப்படவே செய்கின்றது. சில இடங்களில் பொளதீக வளப்பற்றாக்குறை கண்டறியப்பட்டுள்ளது. இவ் விடயங்களில் சமூகத்தின் ஒத்துளைப்பும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

Read more

தமிழீழ  மக்கள்   கல்விக்கழகம்  நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2015) சூறிச் மாநிலத்தில்-

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

unnamedதமிழீழ மக்கள் கல்விக்கழகம் (05.07.2015) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவுசெய்து. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 26வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்றவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Read more

கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலயத்தில் மது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு-

25.06.2015 (1)யாழ். கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலயத்தில் மது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றுமுற்பகல் 11மணியளவில் இடம்பெற்றது. கோண்டாவில் சிறீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் மீசாலை தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர் திரு. சுரேஸ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வைத்தியக்கலாநிதி திரு. சிவரூபன், புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலய அதிபர் திரு. ஆர்.சர்வேஸ்வரன், கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலய முன்னாள் அதிபர் சண் வாமதேவன் மற்றும் சிறீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஆகியன சார்பாக அதன் பொருளாளர் திரு. செ.செந்தூரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கோண்டாவில் இராமகிருஸ்ண மகாவித்தியாலயம், கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம், கோண்டாவில் பரஞ்சோதி மகாவித்தியாலயம், திருநெல்வேலி முத்துதம்பி மகாவித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றிருந்தனர்.

Read more

பண்ணையாளர்களின் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க கட்டிடம் திறப்பு-

Ottusuttan 02 (1)முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஐ.ஓ.எல் நிறுவத்தின் நிதியுதவியின்கீழ்; நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட பண்ணையாளர்களின் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத்திற்கான களஞ்சியசாலை உள்ளிட்ட கட்டிடத்தின் திறப்புவிழா இன்று )25.06.2015)நடைபெற்றது. வட மகாhண விவசாய அமைச்சர் கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்கள் இக்கட்டிடத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ சிவநேசன் (பவன்), அமைச்சரின் செயலாளர், ஐ.ஓ.எம் நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி, சிக்கன கூட்டுறவு உதவி ஆணையாளர், சங்கத்தின் அதிகாரிகள், விவசாய அதிகாரிகள் மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

ஒட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் புதிய கடலை இனம் பயிரிடுகை-(படங்கள் இணைப்பு)

ottusuttan 01 (1)முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் முல்லை ஒட்டு என்கின்ற புதிய சிறு கடலை இனம் ஒன்று இன்றையதினம் (25.06.2015) பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டு அதனுடைய விளைச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ க.சிவநேசன் (பவன்) அமைச்சரின் செயலாளர். விவசாய அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம்-

abdul kalamஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். இலங்கையில் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் அப்துல் கலாம், எதிர்வரும் 27 ஆம் திகதி இந்திய திரும்பவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலொன்னே தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால தலைவர்கள் என்ற தலைப்பில் நாளை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் அப்துல் கலாம், ஆயிரத்து 500 மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மிருசுவில் படுகொலை தொடர்பில் படைவீரருக்கு மரணதண்டனை-

colombo magistrate courtயாழ். மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு 8 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் படைவீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மிருசுவில் பகுதியில் இரு சிறுவர்கள் உட்பட 8பேர் கொடுரமான முறையில் கொல்லப்பட்டமை தொடர்பாக குறித்த காலப்பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய 5 பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வழங்கப்பட்டது. அதன்போது சுனில் ரத்தநாயக்க என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றைய நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்படாமையால் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாண முதலமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம்-

vigneswaranவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அமெரிக்கா உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவுஸ்திரேலிய தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்றும் அந்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விக்கினேஸ்வரன் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க விஜயம் இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மீளக்குடியமர்ந்தோருக்கான நிதி அனுப்பி வைப்பு-

resettlementயாழ்ப்பாணம். வலி வடக்கு மற்றும் வலி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளில் மீளக்குடியமர்ந்த 1087 குடும்பங்களுக்கான மீளக்குடியமர்வுக் கொடுப்பனவுகள் குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு கொடுப்பனவாக 5000 ரூபாவும் மீளக்குடியமர்ந்த கொடுப்பனவாக 5000 ரூபாவும் பற்றைகளை துப்புரவு செய்வதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக 3000 ரூபாவும் சேர்த்து மொத்தமாக 13ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அத்துடன் மீளக்குடியமர்ந்த மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்வதற்காக பரப்புக்கு 1871ரூபா. 23சதம் வீதம் எத்தனை பரப்பு காணி துப்பரவு செய்யப்படுகிறதோ அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படுவற்குரிய நிதியும் குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இரு கொடுப்பனவுகளும் மீளக்குடியமர்வதற்காக பதிவு செய்த அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட மீளக்குடியேற்றக் கொடுப்பனவாக 25ஆயிரம் ரூபா மீளக்குடியமர்ந்த பின்னர் வழங்குவதற்கு ஏதுவாக குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் மீளக்குடியமர்ந்த பின்னர் உணவுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு ஒருவருக்கு 150ரூபா விதம் மூன்று நாட்களுக்கான கொடுப்பனவும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுத்த வீ.ஆனந்தசங்கரி-

sangariகிளிநொச்சி, பளை பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு சங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் சங்கரி அவர்கள் கருத்து கூறுகையில், தேசியக் கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார். பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு அண்மையில், வசதிகள் குறைந்த நிலையில் இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேசசபையிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை மோதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு-

welikada.....2012 நவம்பர் 12ம் திகதி வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெலிக்கடை மோதல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் உள்ளிட்ட குழு தமது விசாரணை அறிக்கையை பிரதமரிடன் அண்மையில் கையளித்தது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் அமைப்பக்கடும் விசேட குழு விசாரணை நடத்த வேண்டும் என குறித்த குழு பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையிலுள்ள தகவல்படி பொலிஸ் அதிகாரிகள் சிலர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணைக்குழு கூறியுள்ளது. நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் வசதி குறைப்பாடு, ஆளணி குறைப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. விசாரணை குழுவின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு-

police ...வடமாகாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைந்து கொள்வதற்கு ஆயிரத்து 291 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 946பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தேர்வு ஜீலைமாதம் 11, 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இடம்பெறவுள்ளன. வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் பணியாற்றுவதற்குத் தமிழ் பொலிஸாருக்குப் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், பொலிஸாருக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டன. தமிழ் இளைஞர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து யாழ்.மாவட்டத்தில் இருந்து 573 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. 454 விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற்றன. கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 265 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. 112 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. வவுனியா மாவட்டத்திலிருந்து 212 விண்ணப்பங்கள் கிடைத்தன.152 விண்ணப்பங்கள் தகுதிபெற்றன.

Read more

சுன்னாகம் பொது நூலகத்தின் பொன்விழா நிகழ்வும் மலர் வெளியீடும்-

67676யாழ். வலி தெற்கு பிரதேசசபையின் சுன்னாகம் பொது நூலகத்தின் பொன்விழா நிகழ்வும் மலர் வெளியீடும் 22.06.2015 திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு வலிதெற்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தலைமையில் சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வலிதெற்கு பிரதேசசபையின் ஓய்வு நிலை செயலாளர் திருமதி சரஸ்வதி சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சுன்னாகம் நூலகத்தின் வரலாற்றினை தாங்கிய பொன்விழா மலர் வெளியீடும் இடம்பெற்றது. வெளியீட்டுரையினை ஓய்வு நிலை சுன்னாகம் பொது நூலக நூலகர் க.சௌந்தரராஜ ஐயர் நிகழ்த்தினார். நூலினை வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வெளியிட்டு வைக்க சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர் சி.குமாரவேல் பெற்றுக்கொண்டார். அத்துடன் நூலகத்தில் பணியாற்றியவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

Read more

சிலோன் ருடே பத்திரிகையில் வந்த தம்பிராஜாவின் பேட்டி

Local inquiry to mislead people – Thambirajah

unnamed (1)A prominent member of Tamil National Alliance (TNA) and Leader of Democratic Organization Against Oppression, Thampi Mu Thambirajah said, currently the international inquiry preceding the investigations on war crimes and the international community is at a stage to release the report by September. At this stage the government is emphasizing on a local inquiry to mislead the people.

BY Mirudhula Thambiah

A prominent member of Tamil National Alliance (TNA) and Leader of Democratic Organization Against Oppression, Thampi Mu Thambirajah said, currently the international inquiry preceding the investigations on war crimes and the international community is at a stage to release the report by September. At this stage the government is emphasizing on a local inquiry to mislead the people.

Read more

இலங்கைக்கான ஒன்பது வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்-

srilankaஇலங்கைக்கான ஒன்பது புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் விவரங்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உயர் பதவிகளுக்கான செயற்குழுவின் அங்கிகாரத்தை இவர்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அவ்வமைச்சு, இவர்கள் விரைவில் தங்கள் பதவிகளை விரைவில் ஏற்றுக் கொள்ளவுள்ளார்கள் எனவும் அறிவித்துள்ளது. இதுவரை உறுதிசெய்யப்பட்டு, அனுமதிகளைப் பெற்றுள்ளவர்களின் விவரங்களை மட்டுமே வெளியிடும் ஆணையைப் பெற்றுள்ளதால், ஏனையோரின் விவரங்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். உறுதிப்படுத்தப்பட்டுள்ள தூதுவர்களின் விவரங்களும், அவர்கள் பணியாற்றவுள்ள நாடுகளும்:

ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜெகத் ஜெகசூரிய – பிரேசில்
வை.கே. றோஹண்அஜித் – ஈரான்
பி. செல்வராஜ் – இஸ்ரேல்
ஏ.எம்.ஜே.சதீஹ் – நெதர்லாந்து
ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஆர்.எம்.டி. ரத்னாயக்க – பாகிஸ்தான்
டபிள்யூ.எஃப். கருணாதாச – கட்டார்
திருமதி. ஆர்.டி.ராஜபக்ஷ – ஸ்வீடன்
திருமதி. ஷெனுகா செனவிரத்ன – தாய்லாந்து
திருமதி. எஸ்.எச்.யு. திசாநாயக்க – வியட்னாம்