Header image alt text

கூட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் எவ்வித முடிவையும் எமது கட்சி எடுக்காது-புளொட் தலைவர் சித்தார்த்தன்-

D.Sithadthanகூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுத்தேர்தல் குறித்து கட்சிப் பிரமுகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினோம். இதற்கிணங்க மட்டக்களப்பு, வன்னி போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. மட்டு, வன்னி மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும். அதன் பின்னரே வேட்பாளர் சம்பந்தமாக உத்தியோகபூர்வ முடிவுகள் எடுக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எந்தவொரு நபரையும் எமது கட்சி சார்பாக நிறுத்துவதற்கு முடிவெடுக்கவில்லை. என்னுடன் பலபேர் தொடர்புகொண்டு சந்தர்ப்பம் தருமாறு கேட்கின்றனர். இதேபோன்றுதான் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் பாராளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் நேரில் வந்து தன்னை வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதன்போது அவருக்கு எந்தவிதத்திலும் உறுதியளிக்கவில்லை.

Read more

வடலியடைப்பு சைவ்ப்பிரகாசா வித்தியாசாலையில் விளையாட்டு முற்றம்; அமைத்தலும், அடிக்கல் நாட்டும் நிகழ்வும்-(படங்கள் இணைப்பு)

sffdயாழ்ப்பாணம்; வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையில் 100நாள் வேலைத்திட்டத்துடன் இணைந்ததான 15000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,000,000 நிதியிலிருந்து சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் அமைக்கப்படுவதுடன் ஆண் பெண்களுக்கான மலசலகூடத்தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01.07.2015) புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரி.குமணன், முன்னாள் பாடசாலை அதிபர் அயற் கிராம பாடசாலை அதிபர், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர், பழைய மாணவர் சங்கத் தலைவர், பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Read more

யாழில் மூவருக்கு மரணதண்டனை-

jaffna courtsஇருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது. 2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் – கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இதில் குற்றவாளிகளாக காணப்பட்ட சிவபாலன் கிருஷ்ணகுமார் மற்றும் சுந்தரலிங்கம் செந்தில்குமார் ஆகிய இருவருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார். இதேவேளை, 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி மந்துவில் கிழக்கு பகுதியில் இளையவன் குஞ்சையா என்பர் உயிரிழந்தார். இது வழக்குடன் தொடர்புடைய குற்றவாளி ஆனந்தம் எஸ்லீன் என்பவருக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கம் மரண தண்டனையை வழங்கினார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரைவில் அறிவிப்பு-மனோ-

manoபொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் எதிர்வரும் ஒரு வாரக் காலப்பகுதியில் அறிவிக்கப்படும் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக மலையக மக்கள் முன்னணி நேற்று அறிவித்திருந்தது. எனினும் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன இணைந்து உருவாக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் இந்த தீர்மானத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்திய செயற்குழுவில் விவாதித்து ஒரு வாரத்துக்குள் தீர்மானிக்கப்படும் என மனோகணேசன் கூறியுள்ளார்.

பெண்ணை அச்சுறுத்தி லஞ்சம் பெற்ற பொலிஸார் கைது-

arrestநேற்றிரவு கொழும்பு கருவாத் தோட்ட பிரதேசத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் பயணித்த பெண்ணொருவரை அச்சுறுத்தி 2000 ரூபா இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் சார்ஜன் இருவர் உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கறுவாத் தோட்டம் பகுதியில் பெண்னொருவரை அச்சுறுத்தி குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் பெற்றதாக முறைப்பாடு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு உத்தியோகஸ்தர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதி சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது-

arrest (2)அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் தெமோதரை பிரதேசத்தில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமோதரை எல்லந்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபரொருவNர் கைதுசெய்யப்பட்டுள்ளார். டெடேனேட்டர் 4, அமோனியம் நைத்திரேற்று 815 கிராம், அதிசக்திவாய்ந்த வெடிமருந்து 765 கிராம் ஆகிய வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிபொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: பிரபாகணேசன்-

Praba ganeshanஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். எனினும் தமது கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அவரது சகோதரர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில், ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். இதன்போது அவர் 42ஆயிரத்து 851 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். பின் அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்திருந்தார்.

மாணவர்கள் மூவரைக் காணவில்லை என முறைப்பாடு-

missingயாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூன்று மாணவர்களை கடந்த நேற்று முன்தினம் முதல் காணவில்லையென அச்சிறுவர்களின் உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். வேவில் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த எஸ்.விஸ்ணுராஜா (வயது15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது16), வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது15) ஆகிய 3 சிறுவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். வவுனியாவில் உறவினர் ஒருவரின் பிறந்ததின நிகழ்வுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர்கள் அங்கும் செல்லவில்லையெனவும், இதுவரையில் மீண்டும் வீடு திரும்பவில்லையெனவும் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளர் கட்சி செயலாளர்கள் சந்திப்பு-

electionதேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்றுமாலை 3மணியளவில் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம்திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். வேட்புமனு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பானவர்கள் தவிர்த்து வேட்புமனுக்களை தயார்செய்ய வேண்டும். வாக்களிப்பு நடவடிக்கைகள், வாக்குச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்-

5555கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவற்றை விடுவித்து மக்களை மீள்குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மாவட்டச் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் 181குடும்பங்களும் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களும் பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 342 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 257 குடும்பங்களுமென 807 குடும்பங்கள் மீள்குடியேற வேண்டியுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் மீள்குடியேற்றம் செய்யமுடியாது காணப்படுகின்றது. இராணுவம், கடற்படையினர், பொலிஸார் ஆகியோரின் பயன்பாட்டிலும் காணிகள் இருக்கின்றன. இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்னர் என்றார்.