வடலியடைப்பு சைவ்ப்பிரகாசா வித்தியாசாலையில் விளையாட்டு முற்றம்; அமைத்தலும், அடிக்கல் நாட்டும் நிகழ்வும்-(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம்; வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையில் 100நாள் வேலைத்திட்டத்துடன் இணைந்ததான 15000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 1,000,000 நிதியிலிருந்து சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் அமைக்கப்படுவதுடன் ஆண் பெண்களுக்கான மலசலகூடத்தொகுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01.07.2015) புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ரி.குமணன், முன்னாள் பாடசாலை அதிபர் அயற் கிராம பாடசாலை அதிபர், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர், பழைய மாணவர் சங்கத் தலைவர், பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.