இணுவிலில் கலைநிலம் பிரதேச மலர் வெளியீட்டு விழா-2015-
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய “கலைநிலம்” பிரதேச மலர் வெளியீட்டு விழா-2015 நேற்று (03.07.2015) வெள்ளிக்கிழமை இணுவில் சிவகாமியம்மன் கோவில், திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியனவற்றின் நிதி அனுசரணையுடன், உடுவில் பிரதேச செயலாளர் நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, வலிகாமம் தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்து கிராமங்களின் முக்கிய இடங்கள், கோவில்கள் மற்றும் சமூகத்திற்கு சகல துறைகளிலும் சேவை செய்த பெரியார்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய மிகச் சிறந்த புத்தகமாக “கலைநிலம்” மலர் வெளியிடப்பட்டது. மிகச் சிறப்பாக நடைபெற்ற மேற்படி புத்தக விளையாட்டு விழாவில் அதிதிகளாக புளொட் தலைவரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நாதன், பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வின்போது சமயம், இலக்கியம், விளையாட்டு பாரம்பரிய விளையாட்டு, சித்த மருத்துவம், பண்ணிசை ஆகிய துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள் “ஞான ஏந்தல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.