Header image alt text

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)

Sயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நேற்று (04.07.2015) சனிக்கிழமை மாலை 3.15அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில்; சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு இந்த சனசமூக நிலைய முன்பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன் அவர்களது ஏற்பாட்டில் ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத் தலைவர் திரு. இ.விஸ்வரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. அவர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பே.மயூரதன், (முன்னாள் கிராமசேவையாளர், புன்னாலைக்கட்டுவன் வடக்கு), அ.ரஜீபன் (கிராம சேவையாளர், புன்னாலைக்கட்டுவன் வடக்கு) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக பிரபாலினி புவனனேந்திரன் (உப அதிபர், யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாலயம்), குமாரசிவம் சுரேந்திரன் (அரசாங்க நில அளவையாளர், கிளிநொச்சி) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

Read more

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா.!(படங்கள் இணைப்பு)

IMG_9784வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் 18வது வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா இன்று (05.07.2015) பூந்தோட்டம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சமூகமளிகவில்லை. இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை வங்கி நகரக் கிளையின் முன்னாள் முகாமையாளர் திரு எம்.றோய் ஜெயக்குமார், வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய அதிபர் திருமதி கே.நந்தபாலன், வைத்தியர்களான வி.துஷ்யன், கலைச்செல்வன், பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். கௌரவ விருந்தினர்களாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரவீந்திர உமாசுதகுருக்கள், மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா கௌரவ க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Read more

புலம்பெயர் உறவின் பிறந்த நாளில் முல்லைத்தீவு பெண்ணுக்கு உதவி-

photo 1புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த சங்கீதா தனது பிறந்த தினமான இன்று போரினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த அருள்தாஸ் சிவரஞ்சினி அவர்களுக்கு உதவியுள்ளார். இதன்படி அவரின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் முயற்ச்சிக்காக சங்கீதா அவர்கள் சுமார் 30,000 ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளார். இவ் சமூக சிந்தனையுள்ள சங்கீதாவுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் இனிய பிறந்த hள் வாழ்த்துக்கள். இது போன்று எமது தாயக உறவுகளின் மூன்று வேளை உணவுக்கு வழி செய்வதற்கு உங்களது பிறந்த நாள் நிகழ்வுகள் போன்றவற்றின்போது இவ்வாறான உதவிகளை செய்ய முன்வாருங்கள் மனிதாபிமான உள்ளம் கொண்ட சங்கீதா போன்றவர்கள் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். (வட்டு இந்து வாலிபர் முன்னணி)

மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் அவர்களுக்கு பிரிவுபசார விழா-(படங்கள் இணைப்பு)

photo 3முல்லைத்தீவு மாவட்ட முன்னால் அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு. வேதநாயகம் அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்லத்தில் இன்று பிரிவுபசார விழா இடம்பெற்றது. இதில் மாவட்ட பிரதம கணக்காளர், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர், வட்டு இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்கள், பல நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் போன்றோர் விருந்தினார்களாக கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபரினை கௌரவப்படுத்தினார் இந் நிகழ்வினை இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகம் தலைமை தாங்கி நடத்தியதுடன். இல்லத்தின் விசேட தேவைக்குரிய மாணவர்களின் கலை நிகழ்வுகளால் அரசாங்க அதிபர் மற்றும் சபையோரும் அவர்களின் திறமை கண்டு பெருமிதம் அடைந்தனர்.

Read more

ஐ.ம.சு கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ஹெல உறுமய தீர்மானம்-

hela urumayaஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என மாற்றியமைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறுகின்றது. மேலும் இதுவரை சங்காக இருந்த அக்கட்சியின் சின்னத்தை வைரமாக மாற்றி அமைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை அரசியல் கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னத்தை மாற்றிக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் நான்கு மாற்றங்கள் மேற்கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தமது புதிய பெயரில் போட்டியிடவுள்ளதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வேட்புமனு கையளிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்-

mahindaபொது தேர்தலில் போட்டியிடும் நோக்கமின்றி ஏனைய கட்சிகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ ஆதரவு வழங்கும் நோக்கில் வேட்பு மனு கையளிப்பவர்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். சிலர் அரசியல் கட்சிகள் ஊடாகவோ அல்லது சுயாதீன குழுக்கள் ஊடாகவே அவ்வாறான வேட்பு மனுக்களை கையளிப்பதாகவும், அவ்வாறு எந்த வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு வழங்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஏதேனும் கட்சியோ அல்லது சுயாதீன குழுவினால் ஸ்தாபிக்கப்படும் பிரசார காரியாலயத்தை ஏனைய வேட்பாளர்களுக்கு பயன்படுத்த இடம் வழங்கப்படாது எனவும் தேர்தல் ஆணையரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதவிர, ஏதேனும் கட்சியினால் அல்லது சுயாதீன குழுவினால் போட்டியிடும் வேட்பாளருக்கு பிறிதொரு கட்சியை ஊக்குவிக்க இடம் வழங்கப்படாது என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேர்வின், துமிந்த, சஜினின் வேட்புமனு இல்லை. ஹிருணிகா, கோட்டாபய போட்டி, அர்ஜூன ஐ.தே.கட்சியில் போட்டி-

gotabaya......எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது எனவும் இந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகிய இருவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருப்பதாக தகவல்; வெளியாகியுள்ளன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டபய ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் கூறுகின்றன இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விழிநீர் அஞ்சலிகள் –

Posted by plotenewseditor on 5 July 2015
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலிகள் – அமரர் தர்மலிங்கம் செல்வராசா (துரை) அவர்கள்

5656566கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை (Villiers Le Bel) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் செல்வராசா (துரை) அவர்கள் கடந்த (01-07-2015) அன்று அகலா மரணமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் திரு. தர்மலிங்கம் திருமதி குஞ்சரம் ஆகியோரது அன்பு மகனும், திரு. சுப்பிரமணியம் திருமதி சந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும், சிந்துஜாவின் அன்புக் கணவரும், அர்ச்சனா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். அன்னார் யோகராணி, யோகராசா, செல்வராணி, ஜெயராணி, ஜெயராசா, நாகராசா, தர்மராசா, புவனேஸ்வரராசா, குமுதினி ஆகியோரின் சகோதரனும்

அனுசியா, புகழ்ராஜா, தாஸ், றதினி, சுகந்தினி, சுலேகா, தர்சினி, ஜெகதீஸ்வரன், மாதுழன், கினித்தா, ஜஸ்மன், அனோஜ் ஜஸ்மின் ஆகியோரின் மச்சானும், ரமேஸ், ரூஜிகா, ரவிகா, சுரஞ்சனி, சுபாஷினி, சுதர்சன், யவுதன், திஷான், சங்கீர்த்தனன், கஜனி, நிஷானி, விசாகன், விஜயகுமார், பிரபாகர் ஆகியோரின் மாமனும் யுமானி, நிரோஷன், ஜனன், ஹிந்துஜா, ஹம்சா, சகானா, ஹரினி, ஹரீஸ், மகீசன், சரண்யா, அனீஸ், கனிஷா, அபிஷை, ஆறுன், ஐஸ்வர்யா, இனியா, அகிள் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். 

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தொடர்புகட்கு!  தீபன் -(இலங்கை) 0094773107629 ஜெயராசா (பிரான்ஸ்) 0033 753697455
குமரன் (பிரான்ஸ், 0033 751559227 நாகராசா (லண்டன்) 0044 7440168484
அனோஜ் (லண்டன்) 0044 7448485899 அம்மா (இலங்கை) 0094 771019555
செல்வராணி (இந்தியா) 0091 9790987140 தாஸ் (லண்டன்) 0044 7438498729
குமுதினி (லண்டன்) 0044 7714869833