ஐ.ம.சு கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ஹெல உறுமய தீர்மானம்-

hela urumayaஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என மாற்றியமைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் கூறுகின்றது. மேலும் இதுவரை சங்காக இருந்த அக்கட்சியின் சின்னத்தை வைரமாக மாற்றி அமைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது. இதேவேளை அரசியல் கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னத்தை மாற்றிக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் நான்கு மாற்றங்கள் மேற்கொள்வதற்கு விண்ணப்பித்திருந்ததாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தமது புதிய பெயரில் போட்டியிடவுள்ளதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

வேட்புமனு கையளிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்-

mahindaபொது தேர்தலில் போட்டியிடும் நோக்கமின்றி ஏனைய கட்சிகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ ஆதரவு வழங்கும் நோக்கில் வேட்பு மனு கையளிப்பவர்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். சிலர் அரசியல் கட்சிகள் ஊடாகவோ அல்லது சுயாதீன குழுக்கள் ஊடாகவே அவ்வாறான வேட்பு மனுக்களை கையளிப்பதாகவும், அவ்வாறு எந்த வேட்பாளருக்கும் ஒத்துழைப்பு வழங்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஏதேனும் கட்சியோ அல்லது சுயாதீன குழுவினால் ஸ்தாபிக்கப்படும் பிரசார காரியாலயத்தை ஏனைய வேட்பாளர்களுக்கு பயன்படுத்த இடம் வழங்கப்படாது எனவும் தேர்தல் ஆணையரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதவிர, ஏதேனும் கட்சியினால் அல்லது சுயாதீன குழுவினால் போட்டியிடும் வேட்பாளருக்கு பிறிதொரு கட்சியை ஊக்குவிக்க இடம் வழங்கப்படாது என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேர்வின், துமிந்த, சஜினின் வேட்புமனு இல்லை. ஹிருணிகா, கோட்டாபய போட்டி, அர்ஜூன ஐ.தே.கட்சியில் போட்டி-

gotabaya......எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது எனவும் இந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் வேட்புமனு வழங்கப்படமாட்டாது என தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகிய இருவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருப்பதாக தகவல்; வெளியாகியுள்ளன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டபய ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் கூறுகின்றன இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.