வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா.!(படங்கள் இணைப்பு)
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் 18வது வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா இன்று (05.07.2015) பூந்தோட்டம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சமூகமளிகவில்லை. இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை வங்கி நகரக் கிளையின் முன்னாள் முகாமையாளர் திரு எம்.றோய் ஜெயக்குமார், வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய அதிபர் திருமதி கே.நந்தபாலன், வைத்தியர்களான வி.துஷ்யன், கலைச்செல்வன், பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். கௌரவ விருந்தினர்களாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரவீந்திர உமாசுதகுருக்கள், மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா கௌரவ க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.