Header image alt text

வவுனியாவில் காணமல் போனோரின் கவனயீர்ப்பு துண்டுப்பிரசுரம் விநியோகிப்பும், கூட்டமைப்பு தலைவர்களுடனான சந்திப்பும்-(படங்கள் இணைப்பு)

unnamed (1)இன்றையதினம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் துண்டுப்பிரசுர விநியோகத்தினை வவுனியா நகர் எங்கும் மேற்கொண்டனர். இதில் பிரஜைகள் குழு தலைவர் தேவராஜா, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வவுனியா நகர சபையின் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் த.நிகேதன் மற்றும் ராஜா ஆகியோரும் உறவுகளுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணமல்போன உறவுகளை தேடுவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவ் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா சம்பந்தனுடன், அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்புடன், வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

IMG_9868தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் இன்றையதினம் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து தமது நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்-

tna (4)வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதன் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுக்கும் கலந்துரையாடலில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவ்வாறான வியூகங்களை வகுத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பது மற்றும் கூட்டமைப்பு கட்சிகள் ஒற்றுமையாக எவ்வாறு பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டு. 04 சுயேட்சைகள் கட்டுப்பணம், தேர்தல் தொடர்பில் 12 முறைப்பாடுகள்-

money paidஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை நான்கு சுயேற்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்ய பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. இதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மேற்படி 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களது ஆக்கத்திறன் மேம்பட நூலகங்கள் அவசியம்-வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர்-(படங்கள் இணைப்பு)

P1040008யாழ். தொல்புரம் கிழக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தில் வேள்ட்விசன் நிறுவன அனுசரனையுடன் மாணவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வின்போது வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று இவ் நூலகத்தினை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். எமது பிரதேசத்தில் வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களில் நூலகங்களை ஆரம்பிக்கும் செயல்திட்டத்தினை நிகழ்தி வருகின்றோம். உன்மையில் இதன் நேக்கம் குறித்த கிராமங்களில் உள்ள பாடாலைச் சிறுவர்கள் இவ் நூலகங்களினை பயன்படுத்துவதனூடாக உயர்நிலை அடைவதே ஆகும். இவ் செயல் திட்டத்தின் வெறறிக்கு கிரமத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வாசிப்பதன் ஊடாக மனிதன் பூரணம் அடைகின்றான் என்பாது உயர்தோர் கருத்தாக உள்ளது. இந்நிலையில் இன்றுள்ள மாணவர் சமூதாயத்தினை வாசிக்க தூண்ட வேண்டும்.

Read more