மாணவர்களது ஆக்கத்திறன் மேம்பட நூலகங்கள் அவசியம்-வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர்-(படங்கள் இணைப்பு)

P1040008யாழ். தொல்புரம் கிழக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தில் வேள்ட்விசன் நிறுவன அனுசரனையுடன் மாணவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வின்போது வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று இவ் நூலகத்தினை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். எமது பிரதேசத்தில் வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களில் நூலகங்களை ஆரம்பிக்கும் செயல்திட்டத்தினை நிகழ்தி வருகின்றோம். உன்மையில் இதன் நேக்கம் குறித்த கிராமங்களில் உள்ள பாடாலைச் சிறுவர்கள் இவ் நூலகங்களினை பயன்படுத்துவதனூடாக உயர்நிலை அடைவதே ஆகும். இவ் செயல் திட்டத்தின் வெறறிக்கு கிரமத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வாசிப்பதன் ஊடாக மனிதன் பூரணம் அடைகின்றான் என்பாது உயர்தோர் கருத்தாக உள்ளது. இந்நிலையில் இன்றுள்ள மாணவர் சமூதாயத்தினை வாசிக்க தூண்ட வேண்டும்.

இதன்ஊடாக அவர்களது ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வெறுமனே பாடசாலைப் புத்தக கல்வி என்பது மட்டும் இன்றைய மாணவர்களை உயர்நிலை அடைய வைத்துவிடாது. பல்வேறு நூல்களையும் வாசிப்பதன் ஊடாக பல் வேறு விடங்களையும் மணவர்கள் பெறக் கூடிய நிலை உருவாகின்றது. இன்றை சூழலில் சகல போட்டிப் பரீட்சைகள் மற்றும் தேர்வுகளில் பொது அறிவுத் தேர்வு மிக முக்கிய இடத்தினை வகிப்பதனை யாபேரும் நன்கு அறிவர் இவ் நிலையில் கல்விக்கு மேலாக பெதுஅறிவு மற்றும் பொது விவேகம் என்பது மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இவ் நிலைக்கு இன்றைய மாணவர்கள் தம்மைத் தயார்ப்படுத்த தயாராக வேண்டும். இவ் நிலையினை அடைய இவ் நூலகங்களை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி அதன் வாயிலாக உயர்நிலை அடைய முயற்சிக்க வேண்டும் இதனிலும் மாணவர்களை நூலகங்கள் கவரத்தக்கதான செயல் நிலையினை உருவாக்குவதும் இன்றைய முக்கிய தேவையக உள்ளது. இவ் நிலைக்கு மிக முக்கியமாக சமூகத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் முகமான போட்டிகள் நடாத்துவதனூடாக மாணவர்கள் மத்தியில் பல்வேறு கவர்ச்சிகளை ஏற்படுத்த முடியும். மாணவர்களை வாசிக்க தூண்டுவதன் ஊடாக மாணவர்களின் ஆக்கத்திறன் செயலினை மேலும் மேம்படுத்த முடியும். இனி வருங்காலங்களில் வெறுமனே மனனம் செயவதன் ஊடாக மட்டும் வெற்றி நிலையினை அடைந்து விட முடியாது. ஆகக்கத்திறன் சிந்தனைகளும் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றக் குடிய ஒன்றாகவே உள்ளது. இந்த வகையில் இவ் நூலகம் சிறக்க வாழ்துவதேடு இதன் பயன்பாட்டால் மணவர்களும் உயர வாழ்துகின்றேன் என குறிப்பி;ட்டார்.

P1040001 P1040004 P1040014 P1040015