தமிழீழ மக்கள் விடுதலைக் கழக பிரான்ஸ் கிளையின் செயற்குழு கூட்டம்-(படங்கள் இணைப்பு)

ploteதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
பிரான்ஸ் கிளை
01-07-2015

இன்று பிரான்ஸில் ‘லாகூர்னோவ்’; என்னும் இடத்தில்; தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காலத்தின் தேவை கருதி இக் கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது

*  இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனை

* கல்வி மற்றும் சமுகப்பணிகளில் எமது தலைமை பணியக செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி எமது பங்களிப்பையும் ஆற்றுவதற்கான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

* கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவமாக மற்றும் மாகாண சபையின் உறுப்பிர்களாக எமது கழகம் இணைந்து மக்கள் மத்தியில் தமது சேவையை திறம்பட செயலாற்றியது. தற்போது ஜனநாயக முறையில் பாராளுமன்றத் தேர்தலிலும் பங்காற்ற விளைவதையிட்டு மனமகிழ்வுடன் அதற்கான எமது கிளையின் முழயையான பங்களிப்பையும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

* பிரான்ஸ் கிளையின் கழக செயற்பாட்டினை விஸ்தரிக்கும் நோக்குடன் எமது பழைய தோழர்களை உள்வாங்குதல்.- முன்னர் இருந்து வந்த கருத்து முரண்பாடுகளை மறந்து இனிவரும் காலங்களில் எப்படியான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

-நன்றி-

தொடர்புகளுக்கு
அமைப்பாளர்                         நிர்வாகச் செயலர்

செ. யோன் திருச்செல்வம்            லி தயாளருபன்

0652388554                           0753265173

0753749321

frgfgfgf gfhghg