வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் கல்விக்கான உதவி.!(படங்கள் இணைப்பு)

IMG_9977வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) சகல கிராமங்களிலும் வீரமக்கள் தினம் முன்னெடுக்கப்பட இருக்கும் இக்காலப்பகுதியில், கல்வியின் தேவை கருதி தமிழ் தேசிய இளைஞர் கழகம் அதன் ஸ்தாபகர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரின் பணிப்புரைக்கமைய கழகத்தின் அமெரிக்க கிளையினால் கல்விக்கான சிறு உதவி இன்று (09.07.2015) வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவியானது பாவற்குளம் கனேஸ்வரா வித்தியாலய உயர்தர மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுதொகைப்பணம் கழகத்தின் அறிவொளி இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களுடன் திரு. அ.ஜெயகுமார் (டாக்டர் சோதி), திரு. ரவி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_9977IMG_9981 IMG_9983