வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.!(படங்கள் இணைப்பு)
வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) சகல கிராமங்களிலும் நிரந்தர பேரூந்து தரிப்பு நிலையங்கள், நூல் நிலையங்கள், பொது நோக்கு மண்டபங்கள், முன்பள்ளிகள், தாய் சேய் நிலையங்கள் என பல்வேறு அபிவிருத்திகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் புளொட் அமைப்பு, அவற்றின் தேவையும் பயன்பாடும் கருதி மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க எமது புலம்பெயர் தேசக் கிளைத் தோழர்களின் பங்களிப்புடன் கழகத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப புனரமைப்பு பணிகளில் கழகத்தின் தோழர்களான நிஷாந்தன், ரவி, காண்டீபன் ஆகியோருடன், அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த தோழர் டாக்டர் சோதி(அ.ஜெயகுமார்) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் வீரமக்கள் தினத்தின் நிகழ்வுகள் எதிர்வரும் 13.07.2015 அன்று காலை 10.00 மணிமுதல் ஆரம்பமாகி இறுதி நிகழ்வுகள் 16.07.2015 மாலை 4.00 மணி தொடக்கம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது பணிகளில் இணைய விரும்புவோர் மாவட்ட இணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும். திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)- 0094779942797