நாம் ஒரு பலமான சக்தியாக நின்றால்தான் அரசும், சர்வதேசமும் கூட்டமைப்புடன் பேசும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்-(படங்கள் இணைப்பு)
Sயாழ். கோண்டாவில் ஸ்ரீ அர்ப்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையம், குமரன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் அழைப்பின்பேரில் சனசமூக நிலைய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கொன்று நடைபெற்றது. இன்றுமாலை 6மணியளவில் திரு. பௌசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கோயிலில் விசேட பூஜைவழிபாடுகள் இடம்பெற்று, அதிதிகள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் கருத்தரங்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன், சமூக ஆர்வலர் திரு. கெங்காதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மிக முக்கியமான ஒரு காலகட்டத்திலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. ஏனென்றால் இந்த தேர்தலிலே தமிழ் மக்களுடைய ஒற்றுமையின் பலத்தைக் காட்டவேண்டிய ஒரு காலகட்டம் இதுவாகும். ஆகவே நாங்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தெற்கைப் பொறுத்தமட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் குழப்பகரமான நிலைமையில் இருக்கின்றது.

இந்த நேரத்தில் நாங்கள் 20 ஆசனங்களையேனும் பெற்று ஒரு பலமான சக்தியாக நின்றால்தான் எங்களை தொடர்ந்தும் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக அரசும், சர்வதேசமும் கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்;த்தைகளை நடத்துவார்கள். இப்போது இங்கே பல கட்சிகளையும், சுயேட்சைகளையும் தூண்டிவிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடிப்பதற்கான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இந்த சூட்சுமமான செயற்பாடு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைந்து அவர்களை இனங்கண்டு அவர்களை அந்நியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இத் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கில் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், குமரன் விளையாட்டுக் கழக இளைஞர்கள், ஊர்ப் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

S S S S S S S