கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களிடையேயான விளையாட்டுப் போட்டி-2015 (படங்கள் இணைப்பு)
யாழ். கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் சம்பியன் வெற்றிக்கிண்ணப் போட்டி 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை திரு. சயூட்டன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினரும், பாராளுமன்றத் தேர்தலின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சம்மேளன வடபிராந்திய இயக்குநர் திரு. தவேந்திரன், திரு. சமன் ஜயசிங்க (பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம், அச்சுவேலி), திரு. சண்முகவடிவேலு (இளைஞர் உத்தியோகத்தர், யாழ். மாவட்டம்), திரு. விஜிதரன் (உபதலைவர், இலங்கை இளைஞர் சம்மேளனம்), திரு. அனுஷன் (கிராம உத்தியோகத்தர்), திரு. கோபாலதாஸ் (கிராம உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி இறுதிநாள் சம்பியன் வெற்றிக் கிண்ணப் போட்டிகளாக ஆவரங்கால் கிழக்கு மற்றும் புத்தூர் வடக்கு அணிகளின் பெண்களுக்கான கயிறிழுத்தல் மற்றும் ஆண்களுக்கான உதைபந்தாட்டம் ஆகியன இடம்பெற்றன. மேற்படி கயிறிழுத்தல் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய போட்டிகள் இரண்டிலும் ஆவரங்கால் கிழக்கு அணியினர் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைப் வென்றதுடன், அவர்கள் மாவட்ட ரீதியிலான போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிவைத்தார்கள்.