தர்மபுரம் மத்திய கல்லூரியில் “கலைச்சோலை” நூல் வெளியீட்டு விழா-(படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான தர்மபுரம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களின் “கலைச்சோலை” என்னும் 29ஆவது நூல் வெளியீட்டு விழா நேற்று (13.07.2015) திங்கட்கிழமை கல்லூரியின் அதிபரும், பழைய மாணவருமாகிய திரு. பூலோகராஜா அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வின் வெளியீட்டு உரையினை பழைய மாணவரான க.மகேந்திரன் அவர்களும், ஏற்புரையினை பழைய மாணவரான மாணிக்கம் ஜெகன் அவர்களும் வழங்கினார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வைத்திய அதிகாரி திரு. சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகம் சார்ந்தோர் கலந்துகொண்டு நிகழ்வினை வெகுவாகச் சிறப்பித்திருந்தனர்.