வலி மேற்கில் தாய உறவுகளை தலைநிமிரச் செய்வோம் சமூகப்பணி-(படங்கள் இணைப்பு)

unnamed (4)யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் வு.சு.வு வானொலியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற சமூகப்பணி நிகழ்ச்சித் திட்டத்தின் வாயிலாக வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சங்கானை மத்தி கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் அல்லது தந்தையை இழந்த மிக வறுமை நிலையில் உள்ள 22 மணவர்கட்கு 11.07.2015 அன்று சங்கானை இந்து இளைஞர் மற்றத்தில் கற்றல் உபகரணங்களை கையளித்தார். இவ் நிகழ்வில இளைப்பறிய மாவட்ட இளைஞர்கள் சேவை பணிப்பாளரும் குறித்த கிராமத்தின் மூத்த பிரஜையுமாகிய திரு. ச.சிவதெற்சணாமூர்த்தி மற்றும் பிரதேச பெருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வு பிரான்சில் வசிக்கும் திருமதி.லாலா ரவி அவர்களிற்காக மேற்கொள்ளப்பட்டது.

unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7)