மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக முறைப்பாடு-

JVPஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் புடைசூழ தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பனர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இதனால் ஏனைய வேட்பாளர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள அகதிகளுக்கு சலுகை குறைப்பு-

britain refugeesபிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்து கோருகின்றவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுண்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் சிறார்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவர் என்றும் சபை கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் மத நிகழ்வுகளில் தேர்தல் பிரச்சாரம்-கபே-

caffeமுஸ்லிம் மத நிகழ்வுகளை சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது கவலையளிப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. முஸ்லிம் மத நிகழ்வுகளை முன்வைத்து சிலர் பொருட்கள் விநியோகித்து அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 261 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் உறவு சிவரூபனின் பிறந்தநாளையொட்டி கல்வி மேம்பாட்டுக்கு உதவி-

photo 1புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு.க. சிவரூபன் அவர்களின் 50வது பிறந்தநாளன இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் கல்வித்திட்டத்தில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களின் வங்கிக் கணக்கில் தலா 500ரூபா வீதம் வைப்பிலிட்டுள்ளார். இவ் சமூக உணர்வும் எமது இளைய தலைமுறையின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுள்ள சிவரூபனுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், சிவரூபனைப் போன்றவார்களினால் கல்வி மேம்பாட்டுக்காக செய்யப்படும் உதவிகள் எமது தாயக உறவுகளின் எதிர்கால இளைய தலைமுறையினை ஒர் கல்விச் சமூகமாக மாற்ற முடியும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினர் வடக்கு முதலமைச்சர் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)-

pppதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது. இந்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இச்சந்திப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கலந்துரையாடலின்போது, வடக்கு நிலைமைகள், இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேறிய மக்களின் நிலைமைகள், விடுவிக்கப்பட்ட பகுதிகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகள், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இது விடயமாக அங்குள்ள மக்களுக்கு உதவிகளை நேரடியாகவோ அல்லது அமைப்புக்களின் ஊடாகவோ வழங்குவது பற்றியும் சிறியளவிலான முதலீடுகளை செய்வது தொடர்பிலும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதோடு, பெரியளவிலான முதலீடுகளை தற்போதைய நிலையில் தவிர்த்துக் கொள்வது பற்றியும் ஆழமாக ஆராயப்பட்டது.

அத்துடன் வட பகுதியின் கல்வி மேம்பாடு குறித்து இச்சந்திப்பின்போது மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டதோடு, அதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. மற்றும் வடபகுதியின் கலாசார சீர்கேடுகள் பற்றி அக்கறையுடன் கருத்துக்கள் பகிரப்பட்டதோடு அதனைத் தடுப்பதற்கு என்னவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் பேசப்பட்டது. இதன்போ மாணவர்கள் மத்தியில் மது, போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பில் முதலமைச்சர் பெரிதும் கவலை தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை, முதலமைச்சர் அவர்கள் தான் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்று முன்பு கூறியதாக கருத்தொன்று நிலவியது பற்றியும், இதன்போது ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை ஒரு பொதுவான ஆளாகவே பார்ப்பதாகவும் நீங்கள் ஒரு கட்சி சார்ந்து நிற்கக்கூடாது என்றும் கூறிய விடயம் பற்றியும் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாணசபையில் ஏனைய அங்கத்தவர்களுடனான உங்களது உறவு இப்போது எவ்வாறுள்ளது என்று கேட்டபோது, இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் அவர்கள்,

தான் தமிழரசுக் கட்சியை மாத்திரம் சார்ந்த நிற்காது எல்லோருக்குமே பொதுவானவராகவே செயற்படுவதாகவும் எல்லா கட்சிகளின் விருப்பின்பேரில்தான் தான் முதலமைச்சராக வந்ததாகவும் அதற்கேற்றவாறு தான் ஒரு கட்சியைச் சார்நதவன் அல்ல பொதுவானவராகவே செயற்படுகின்றேன் என்றும் கூறியுள்ளார்.

ppptamilnewsnet-TNA_UK-2 (1)
tamilnewsnet-TNA_UK-1
tamilnewsnet-TNA_UK-6 tamilnewsnet-TNA_UK-7 (1)