Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-(படங்கள் இணைப்பு)

tna_electoin_meeting_002பொதுத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது தலைமையில் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இன்றுமாலை ஆரம்பமாகிய முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு திட்டத்தினை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான தீர்வுகளுக்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டுமான பணிகளுக்கான திட்டங்கள் என்பனவும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Read more

திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்-த.சித்தார்த்தன்-
etrtr
இனப்பிரச்சினைக்கு தீர்வாக திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கியதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தல் நிலைமைகளும் கட்சியின் நிலைப்பாடும் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தது. இந்நிலையில் அந்த அரசை மாற்ற வேண்டுமென தமிழ் மக்களும ஏனைய மக்களும் விரும்பி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மிகத் தெளிவாக சிந்தித்து தமது பலத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.

Read more