Header image alt text

தேசிய பாதுகாப்புக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது-இராணுவத்தளபதி-

defenceதேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.டப்ளியு. ஜே.சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருத்தி முன்னெடுக்கவேண்டிய சகல முன் நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும், புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மாலைத்தீவுக்கு விஜயம்-

presidentமாலைதீவின் 50ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் மாலைத்தீவுக்கு பயணமாகியுள்ளனர். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், மாலைதீவு ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபடுவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-

earth quakeஇந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என இந்தோனேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் கடல்பகுதியில் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை.

தேர்தல் சட்டங்களை மீறிய 175 பேர் கைது-

election violenceதேர்தல் சட்டங்களை மீறிய 175 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிய 120 சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட சுமார் 33 வாகனங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

எதிர்வரும் தேர்தல் இங்கிலாந்து தேர்தலுக்கு ஒப்பானது-பிரதமர்-

maithri & ranilஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இங்கிலாந்தில் இடம்பெறும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானங்களை எடுக்கின்றார். ஜனாதிபதி எந்தவித தீர்மானங்களையும் எடுக்கமாட்டார். தேர்தல்கள் ஆணையாளர் சட்டங்களை செயற்படுத்துகின்றார். பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும். தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தாக்கப்படமாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் எங்கும் சென்று பிரச்சினைகளின்றி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடலாம். ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரலாம்.

Read more

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

IMG_0901வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நாமம் கொண்ட உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (25.07.2015) திரு. ராமநாதன் ராம்தீபன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான திரு கந்தையா சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பு மற்றும் கௌரவ அதிதிகளாக பிறமண்டு வித்தியாலய அதிபர் திருமதி ம.திருவருள்நேசன், ஓய்வுபெற்ற தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் திரு சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு எஸ்.இராஜேஸ்வரன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more