திருமலையில் எண்ணெய்வள ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை-

oilதிருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்வள ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலைதீவு சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்-

maithriமாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். மாலைதீவின் சுதந்திர தின நிகழ்வுகள் அந்நாட்டின் தலைநகர் மாலேயில் நேற்றிரவு இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால பங்கேற்றிருந்தார். ஜனாதிபதியின் மாலைதீவு விஜயத்தில் அந்நாட்டு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

திருச்சியில் முன்னாள் புலி உறுப்பினர் கைது-

arrestமற்றுமொரு முன்னாள்புலி உறுப்பினர் நேற்று தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. குமரகுரு எனப்படும் சந்தேகத்திற்குரியவர், திருச்சி விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு உதவியதாக கருதப்படும் மேலும் இருவர் இதன்போது கைதாகியுள்ளனர். அவர், இலங்கைக்கு வான்வழியாக பயணிக்க முற்படும்போதே தாம் அவரை கைதுசெய்ததாக திருச்சி பொலிஸார் கூறுகின்றனர்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு, சந்தேகநபருக்கு விளக்கமறியல்-

courts (1)பாரத ரக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூன்றாவது முக்கிய சந்தேகநபர் சமிந்த ரவி ஜயநாத், பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மாதாந்தம் இரகசிய பொலிஸில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சந்தேகநபர் அந்த நிபந்தனையை மீறியதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பல தடவைகள் இரகசிய பொலிஸார் முன் ஆஜராகவில்லை என அவர் கூறியுள்ளார். இந்த கருத்துகளை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன், சந்தேகநபரை ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் சங்கானை வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)

ஜேர்மன் புலம் பெயர் உறவுகளால் சங்கனை வைத்தியசாலைக்கு என அனுப்பிவைக்கப்பட்ட பொருடகள் அண்மையில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.P1060812

P1060811 P1060813