வட மாகாணத்தின் சிறந்த கைப்பணி உற்பத்தி திறன் போட்டியின் முடிவுகள்.!(படங்கள் இணைப்பு)
கடந்த மாதம் நியுகிலியஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில், பனை அபிவிருத்திச் சபையினால் கைப்பணிப் பயிற்சி பெற்றுவரும் பயிற்சியாளர்களுக்கு நடைபெற்ற போட்டியில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் சிறந்த உற்பத்தியினை வழங்கி முதல் இடத்தை கெக்டர் ஜோ.எமில் திரேசா அவர்களும், இரண்டாம் இடத்தை திருமதி யுவச்சந்திரகுமார் லூசியா அவர்களும், மூன்றாம் இடத்தினை திருமதி விக்னேஸ்வரன் உஷாநந்தினி அவர்களும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களை வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வட மாகாண சபை உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தலின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான திரு கந்தையா சிவநேசன்(பவன்), வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியைக்கு தமது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்தார்கள். மேலும் சிறந்த பல உற்பத்தியினை வழங்கி எமது சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.