ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் கட்சியிலிருந்து நீக்கம்-

slfpநல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரியவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில கூறப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் கட்சி யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் கைச்சாத்து-

ranil (5)பொது மற்றும் அரசியல் அமைப்புகள் 110 இணைந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று முற்பகல் இலங்கை மன்றக்கல்லூரில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, மாதுலுவாவே சோபித்த தேரரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளில் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.