உயிரிழை அமைப்பின் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_7706முள்ளந்தணடு வடம் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பினருக்கு (29.07.2015) அன்று எங்கள் அமைப்பின் ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும், பொதுமக்களிடமும் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் இரு கட்டங்களாக முறையே 57,000 ரூபா. 1,11,000 பெறுமதியான மருத்துவ பொருட்களினை வழங்கி அவர்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓரளவேனும் நிவரத்தி செய்துள்ளோம். இந்த வகையில் எமது அமைப்பின் ஊடாக இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வாருங்கள் என தயவான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். இதனடிப்படையில் 29.07.2015இல் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள சோலைவனத்தில் வைத்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்திலுள்ள படுக்கை புண்ணினால் பாதிப்புற்று உயிருக்காக போராடிவரும் 31பேருக்கு மருத்துவ Normal saline,  Gauze, Urine bags, plaster, Povidone iodine solution, Catheter என்பனவற்றினை வழங்கியுள்ளோம்.

இதற்கான சுமார் 1,25,000 ஷரூபா பெறுமதியான நிதி அனுசரனையினை S.piraveen( Canada), S.santhira vimalathevi (swiss), S.piratheepan (Jaffna), T.lingotpavanathan (Jaffna)  ஆகிய மனிதநேய உள்ளங்கள் வழங்கியுள்ளார்கள். உயிரிழை அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க இதுவரை காலமும் சுமார் 2,93,000 ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம். எமது அமைப்பின் தயவான கோரிக்கையினை ஏற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கான கல்வி. வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிவரும் எமது முகநூல் நண்பர்கள் வட்டுக்கோட்டை வாழ் மக்கள் புலம்பெயர் உறவுகள் மற்றும் அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

IMG_7706IMG_7644 IMG_7657 IMG_7669