Header image alt text

சுழிபுரம், தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

P1060975யாழ். சுழிபுரம் தொல்புரம் சர்வோதயத்தில் ஆடிப் பிறப்பு நிகழ்வு சட்டத்தரனி செல்வி.சாருஜா.சிவநேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கல்வியில் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் பா.தணபாலன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது இன்று இவ் நிகழ்வில் கலந்து கொள்வதனை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இவ் நிகழ்வின் வாயிலாக கடந்த கால எமது இனத்தின் பண்பாடுகள் பாரமபரியங்கள் இவ் இடத்தில் நிலை பெறுவதனை இட்டு மகிழ்ச்சியாகவே உள்ளது. கடந்த கால யுத்தம் அதன் பின்னரான கலப்பகுதியின் செயற்பாடுகள் மற்றும் புலம் பெயர்;வுகள் போன்ற பல நிகழ்வுகள் எமது பண்பாட்டின் பல பகுதிகளையும் சிதைவடைய வைத்துள்ளது. இவை மீண்டும் இவ்வாறான நிகழ்வுகள் வாயிலாக கட்டி வளர்க்கப்படவேண்டும்

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் என்.சிறீகாந்தா ஆகியோர் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது….(படங்கள் இணைப்பு)

20150724_181520

20150724_193806

Read more

டொக்டர் அப்துல் கலாம் காலமானார்-

abdul kalamஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் இன்று காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம் கலந்து கொண்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி சரிந்த அவர் அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து இராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது. இந்த மருத்துவர்கள் அப்துல் கலாமின் உடல்நிலையை பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்துல் கலாமின் உயிர்பிரிந்தது. இதேவேளை இவரது மறைவை முன்னிட்டு 7 நாள் துக்கம் அனுஷ்ரிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

திருமலையில் எண்ணெய்வள ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை-

oilதிருகோணமலை கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்வள ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலைதீவு சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்-

maithriமாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். மாலைதீவின் சுதந்திர தின நிகழ்வுகள் அந்நாட்டின் தலைநகர் மாலேயில் நேற்றிரவு இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால பங்கேற்றிருந்தார். ஜனாதிபதியின் மாலைதீவு விஜயத்தில் அந்நாட்டு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

திருச்சியில் முன்னாள் புலி உறுப்பினர் கைது-

arrestமற்றுமொரு முன்னாள்புலி உறுப்பினர் நேற்று தமிழகம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. குமரகுரு எனப்படும் சந்தேகத்திற்குரியவர், திருச்சி விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு உதவியதாக கருதப்படும் மேலும் இருவர் இதன்போது கைதாகியுள்ளனர். அவர், இலங்கைக்கு வான்வழியாக பயணிக்க முற்படும்போதே தாம் அவரை கைதுசெய்ததாக திருச்சி பொலிஸார் கூறுகின்றனர்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு, சந்தேகநபருக்கு விளக்கமறியல்-

courts (1)பாரத ரக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூன்றாவது முக்கிய சந்தேகநபர் சமிந்த ரவி ஜயநாத், பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மாதாந்தம் இரகசிய பொலிஸில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சந்தேகநபர் அந்த நிபந்தனையை மீறியதாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பல தடவைகள் இரகசிய பொலிஸார் முன் ஆஜராகவில்லை என அவர் கூறியுள்ளார். இந்த கருத்துகளை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன், சந்தேகநபரை ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் சங்கானை வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)

ஜேர்மன் புலம் பெயர் உறவுகளால் சங்கனை வைத்தியசாலைக்கு என அனுப்பிவைக்கப்பட்ட பொருடகள் அண்மையில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.P1060812

Read more

தேசிய பாதுகாப்புக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது-இராணுவத்தளபதி-

defenceதேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.டப்ளியு. ஜே.சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருத்தி முன்னெடுக்கவேண்டிய சகல முன் நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும், புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மாலைத்தீவுக்கு விஜயம்-

presidentமாலைதீவின் 50ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் மாலைத்தீவுக்கு பயணமாகியுள்ளனர். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், மாலைதீவு ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபடுவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-

earth quakeஇந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என இந்தோனேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் கடல்பகுதியில் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை.

தேர்தல் சட்டங்களை மீறிய 175 பேர் கைது-

election violenceதேர்தல் சட்டங்களை மீறிய 175 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிய 120 சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட சுமார் 33 வாகனங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

எதிர்வரும் தேர்தல் இங்கிலாந்து தேர்தலுக்கு ஒப்பானது-பிரதமர்-

maithri & ranilஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இங்கிலாந்தில் இடம்பெறும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானங்களை எடுக்கின்றார். ஜனாதிபதி எந்தவித தீர்மானங்களையும் எடுக்கமாட்டார். தேர்தல்கள் ஆணையாளர் சட்டங்களை செயற்படுத்துகின்றார். பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும். தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தாக்கப்படமாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் எங்கும் சென்று பிரச்சினைகளின்றி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடலாம். ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரலாம்.

Read more

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)

IMG_0901வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நாமம் கொண்ட உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (25.07.2015) திரு. ராமநாதன் ராம்தீபன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான திரு கந்தையா சிவநேசன்(பவன்), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் திரு எஸ்.ஜெகதீஸ்வரன்(சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பு மற்றும் கௌரவ அதிதிகளாக பிறமண்டு வித்தியாலய அதிபர் திருமதி ம.திருவருள்நேசன், ஓய்வுபெற்ற தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் திரு சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு எஸ்.இராஜேஸ்வரன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு-(படங்கள் இணைப்பு)

tna_electoin_meeting_002பொதுத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது தலைமையில் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இன்றுமாலை ஆரம்பமாகிய முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு திட்டத்தினை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான தீர்வுகளுக்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டுமான பணிகளுக்கான திட்டங்கள் என்பனவும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Read more

திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்-த.சித்தார்த்தன்-
etrtr
இனப்பிரச்சினைக்கு தீர்வாக திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கியதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தல் நிலைமைகளும் கட்சியின் நிலைப்பாடும் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தது. இந்நிலையில் அந்த அரசை மாற்ற வேண்டுமென தமிழ் மக்களும ஏனைய மக்களும் விரும்பி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மிகத் தெளிவாக சிந்தித்து தமது பலத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.

Read more

கறுப்பு யூலையின் 32ஆம் ஆண்டு நினைவுகள்-(படங்கள் இணைப்பு)

black july 83 (1)கறுப்பு யூலையின் 32ம் வருட நினைவுதினம் நேற்று 23ம் திகதிமுதல் எதிர்வரும் 27ம் திகதிவரை அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ்அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியின்போது அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும், இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் இணைந்தனர். இலங்கையிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

Read more

தம்பி மு.தம்பிராசா அவர்களின் மகனை காணவில்லையென முறைப்பாடு-

wererereஅடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகனான திருவளவன் (வயது 18) என்பவரை நேற்றுமாலை 3 மணிமுதல் காணவில்லையென அவரது தந்தை மு.தம்பிராசா அவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகரத்திலுள்ள தனது அலுவலகத்திலிருந்து, அரசியல் பணியை மேற்கொண்டிருந்த தனது மகன் காணாமற்போயுள்ளதாக தந்தை தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தம்பி மு. தம்பிராசா அவர்கள் கூறுகையில், நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை பிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ். காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு வடமாகாண சபையின் பரிந்துரை-

npc2_CIதமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இணைத்துக் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகளை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதி செய்யும், அதிஉச்ச அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் வடக்கில் பொருளாதார அபிவிருத்தி வலயங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் அக்டோபர் 25ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை-

fishingஇலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடைசெய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இருநாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க தலைவர் ஜெஸ்டின், இந்திய ஊடகமொன்றுக்கு தெரித்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, இந்திய கடற்படை அதிகாரியினால் எடுக்கப்பட்ட முடிவை விரும்பாததன் காரணமாகவே இலங்கை மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்தும் கடல் வளங்களை சேதப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய மீனவர்கள் தமது மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியமைக்கு 1 கோடி ரூபாய் நட்டஈடு செலுத்த வேண்டும் என இலங்கை மீனவர்கள், இந்திய அரசாங்கத்துக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை நேற்று நள்ளிரவு, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் துரத்தியுள்ளனர்.

ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா-

janakaஉள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மகாணசபை அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியையும் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, லசந்த அலகியவன்ன மற்றும் எரிக் வீரவர்தன ஆகியோரும் ஏற்கெனவே தங்களது பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போலி இலக்க வாகனத்துடன் சுவரொட்டிகள் மீட்பு-

policeஅநுராதபுரம், கெபத்திகொல்லாவ பிரதேசத்தில் இராணுவ வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இலக்கத் தகட்டினை போலியான முறையில் பதிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பாரிய அளவான தேர்தல் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான ஒருவருடைய சுவரொட்டிகளே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகுpறது. இவ்வாறு 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்து தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வீரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகவே இவ்விடயம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கைதுசெய்யப்பட்ட சாரதி, கஹட்டகஸ்திகிலியவையும், உதவியாளர் மதவாச்சியையும் வசிப்பிடமாக கொண்டவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரியில் மோட்டார் குண்டு மீட்பு-

bombயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவினரை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாக குறித்த பிரதேசம் காணப்படுகின்றது.

வன்னியில் தபால்மூல வாக்களிப்புக்கு 6967 பேர் தகுதி-

postal_votes_2எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 6967 பேர் தகுதி பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2654 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1643 பேரும் தபால் மூலம் வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ளனர். மூன்று மாவட்டத்துக்குமான வாக்குச் சீட்டுகள் கடந்த 22 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்துக்கு எடுத்துவரப்பட்டு 23 ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மன்னாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.