எமது குடியேற்றக் கிராமங்களில் இதுவரை காலமும் அபிவிருத்தி பணிகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? மக்களே சிந்தியுங்கள்…
  முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)

mohanஎமது அமைப்பின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில், எமது குடியேற்ற கிராமங்களின் நிலை குறித்து, வவுனியா மாவட்ட இணைப்பாளர் என்ற வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்துடன், மக்கள் மீது அக்கறை உள்ளவன் என்ற வகையில் இதனை எழுதுகிறேன்.

எமது அமைப்பிற்கு 15 வருட காலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எதுவும் அற்ற நிலையில் எங்களால் இயன்ற பணிகளை மக்களுக்கு வழங்கியவன் என்ற நிலையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில், வன்னி (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில், வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 4இல் போட்டியிடும் எமது அமைப்பின் ஒரே ஒரு வேட்பாளரான கந்தையா சிவநேசனை வெற்றிபெற செய்வதன் மூலம் கிராமங்களை துரித அபிவிருத்தி பாதையில் கொண்டுசெல்ல உங்கள் வாக்கை வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 4ற்கும் இட்டு எமது அமோக வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.

உங்களுக்காக கவனிப்பாரற்ற எமது குடியேற்ற கிராமங்கள் சிலவற்றை பதிவேற்ற வேண்டிய கட்டாயத்தின் நிமிர்த்தம் பதிவேற்றுகிறேன். வவுனியாவின் எல்லை மற்றும் கிராம பகுதிகளின் குடியேற்ற நடவடிக்கை மீது உரிமை உள்ள ஒருவர்களில் நானும் என்ற வகையில் இதனை கருத்திடுகிறேன்.

1-கல்வீரன்குளம்
2-ஆச்சிபுரம்
3-திருநாவற்குளம்
4-ஊர்மிளா கோட்டம்
5-அம்பிகை பாலன் கோட்டம்
6-காத்தான் கோட்டம்
7-வசந்தன் நகர்
8-நவநீதன் கோட்டம்
9-ரகுபாக்கம்
10-கண்ணன் கோட்டம்
11-சிவகுமாரன் கோட்டம்
12-சந்ததிபுரம்
13-எல்லப்பர் மருதங்குளம்
14-வன்னிக் கோட்டம்
15-தாலிக்குளம் 20 வீட்டுத்திட்டம்
16-மதகுவைத்தகுளம்
17-சேகர் கோட்டம்
18-வின்சன் கோட்டம்
19-ஈசன் கோட்டம்
20-பூம்புகார் (காந்தியம்-1977)
21-கந்தசாமி நகர்
22-துட்டுவாகை
23-நித்திய நகர்

இவை அனைத்தும் வன்னி தேர்தல், மாவட்டத்தின் வவுனியா நிர்வாக மாவட்ட அலகில், நகரசபை, பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆதிக்கத்தின் கீழ் வரிகள் செலுத்தும் கிராமங்கள் – ஏன் இந்த உள்ளூராட்சி மன்றங்கள் உங்கள் கிராமங்களில் அவசியமான அடிப்படை அபிவிருத்தி பணிகளின் போது “அத்துமீறிய” எனும் சொல்லுடன் எமது கிராமங்கள் மீது அபிவிருத்திகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? இவற்றை மாற்றி அமைக்கவும், குடியேற்றத்தில் நிறைவேற்றப்படாத குறைபாடுகளை நிறைவேற்ற எமது அமைப்பிற்கு வன்னியில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதி தேவை. இதன் மூலம் எமது கிராமங்களுக்கு நிச்சயமாக காணி உரிமம், வடிகால் அமைப்புகள், குடி நீர் வசதிகள் என்பவற்றை பெற்றுத்தர எமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்…..

தேர்தல் காலங்களில் சூடு பிடிக்கும் எமது கிராமங்கள், ஒருசிலரின் தவறான வார்த்தைகளும், நெறிப்படுத்தலும் எமது கிராமங்களை இன்றுவரை பின்நோக்கி கொண்டுசெல்லப்பட்டத்தை கண்கூடாக அவதானித்த ஒருவன். எனவே எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டியது எமது கிராமத்தின் மீது என்றும் அக்கறை உள்ளவர்களையும், உரிமை உள்ளவர்களையும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

1990 காலப்பகுதியில் நாம் வன்னி பகுதியில் இவ்வாறான எல்லைக்கிராமம் மற்றும் ஏனைய கிராமங்களில் குடியேற்றங்களுடன் பல நிரந்தர அபிவிருத்தி பணிகளை நாம் மேற்கொள்ளாவிட்டால் ?? இன்று வன்னியின் நிலை என்ன ??

வவுனியாவில் சனத்தொகை இருப்பை காட்டுவதற்கு எமது குடியேற்றங்களை மையப்படுத்தாவிட்டால் இன்றைய நிலையை சிந்தியுங்கள்.
எமது போராட்டங்கள் எமது மண்ணுக்கும் உரிமைக்குமே….

வன்னி மண்ணை- இன்றும் தமிழரின் பெரும்பான்மை இருப்பாக நிலைநாட்டியது எமது அமைப்புதான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

பாராளுமன்ற தேர்தலில் எமது அமைப்பின் சார்பில் வன்னி (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வீட்டுச் சின்னத்தில் இலக்கம் 4 இல் போட்டியிடும், எமது வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசனை(பவன்) வெற்றிபெறச் செய்வதன் மூலம், எமது மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவின் சகல பகுதிகளிலும் துரித அபிவிருத்தியில் நிச்சயமாக எமது அமைப்பு முழு மூச்சாக செயற்படும் என்பதில் உங்களில் ஒருவனான நான் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),
முன்னாள் உப நகர பிதா,
வவுனியா.
ஸ்தாபகர் – தமிழ் தேசிய இளைஞர் கழகம்