தமிழ் வானொலி (பிரான்ஸ்) முக்கியஸ்தர் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினர் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க காரியாலயத்துக்கு வருகை தந்திருந்த தமிழ் வானொலி(பிரான்ஸ்) முக்கியஸ்தர்களுள் ஒருவரான திரு ஜெகநாதன்(ஜேர்மனி) அவர்களுடன் ஒரு சந்திப்பு நேற்று (02.08.2015) முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கல்வி வாழ்வாதாரம் மற்றும் மருத்துவம் சம்பந்தமாக அந்த மக்கள் எதிர்நோக்கின்ற சவால்கள் பற்றி எடுத்துக் கூறியிருந்தோம். அதற்கு அவர்கள் அம் மக்களின் துயரம்நீக்க தங்களால் ஆன மனிதாபிமான உதவிகளை அவ் மக்களுக்கு செய்வதாக கூறியிருந்தார். (- வட்டு இந்து வாலிபர் சங்கம்)