ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடன அறிக்கை-

UNPபொதுத் தேர்தலுக்காக வெளியிடப்படட ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடன அறிக்கை மல்வத்தை பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் மல்வத்தை மகா விகாரையில் இந்நிகழ்வு இன்றுமுற்பகல் இடம்பெற்றது. பீடாதிபதியை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த அமைச்சர், நல்லாட்சிக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் தேர்தல் செயற்பாடுகளின்போது புலப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசாங்க நிர்வாக பலமிருக்கும் வரையில் மாத்திரமே இவர்கள் வலுவுடன் செயற்பட்டு வருகின்றனர். சிங்கம் போன்று செயற்பட்டவர்கள் ஆட்சி இழந்தபின் நரிகளை போன்ற செயற்படுகின்றனர். தேர்தல் சட்டதிட்டங்களை வலுப்படுத்தியதன் காரணமாக தேர்தல்கள் ஆணையாளர் பாராட்டத்தக்கவர். இதனால் தமக்கும், ஏனைய கட்சிகளுக்கும் அனுகூலம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்-

policeஉடன் அமுலுக்கு வரும் வகையில், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம்.தசநாயக்க தங்காலை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான கே.ஜீ.பி.புத்திக சமரபால தேசிய பொலிஸ் வித்தியாலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பொலிஸ் கட்டளையிடும் மற்றும் தகவல் வழங்கும் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட டி.எம்.ஜே.பி தசநாயக்க, நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ பஸ் விபத்தில் 21 பேர் காயம்-

accidentகம்பஹா, நிட்டம்புவ – ரதாவடுன்ன பிரதேசத்தில் இன்றுகாலை பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை பேக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேஷரூந்து மற்றும் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. எவ்வாறாயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பாரியளவான காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவரும் இல்லை என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிஷாட் பதியுதீனுக்கு நோட்டீஸ்-

rishad badyudeenசெம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோதமான காடழிப்பு மற்றும் சட்டவிரோதமான மீள் குடியேற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனுவை விசாரணைக்கு உட்படுத்தியபோதே நீதிமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுக்க முடிவு-

vaseem thajudeen2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற விசேட வைத்தியக் குழு முன்னிலையிலேயே அவரது ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, ஜனாஸாவை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

வெலே சுதாவின் சகாக்களை கைதுசெய்ய நடவடிக்கை-

vele sutha friendசர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவின் சகாக்கள் நால்வரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இரு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்களே போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வெலே சுதாவுடன் தொடர்பு உள்ளதாக கூறி அவர்களது புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தெஹிவளையைச் சேர்ந்த திலின் நில்மானி சானக பொன்சேகா, வெள்வத்தையைச் சேர்ந்த நதிக்க நில்மினி, சுகத் குமார ஆகியோரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112320141, 01123220145, 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் அறியத்தரலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

விறகு வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு-

dead.bodyமட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூச்சுக்கூட்டுப் பகுதியில் விறகுவெட்டச் சென்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸர் மேலும் தெரியவருகையில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா கோவிந்தசாமி (45 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இன்றுகாலை பூச்சிக்கூட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற நிலையில் கத்தி, கோடரி என்பன அருகில் இருந்தநிலையில் சடலமாக பொதுமக்களின் உதவியுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது-

puthaiyalபுத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருக்கெட்டியாவ வனப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதெனிய, சிரிபுர, தெஹியத்தகண்டி, மஹவௌ, நகத்தேகம, ஆண்டிகம மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்வர்களாவர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றிணையடுத்தே குறித்த இடத்தினை முற்றுகையிட்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மலர்தட்டு, பூஜை பொருட்கள் உட்பட அகழ்வுப் பணிக்குத் தேவைப்படும் உபகரணங்கள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நவகத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.