தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு, தமிழ் தேசிய இளைஞர் கழகம் பூரண ஆதரவு.!
(இளைஞர் கழகத் தலைவர் காண்டீபன்)-(படங்கள் இணைப்பு)

bbbbbஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைய வேண்டிய இக் காலப்பகுதியின் அவசியம் கருதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு(புளொட்) ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக இளைஞர் கழகத்தின் தலைவரும், விஞ்ஞானமானி பட்டதாரியும், திறந்த பலகலைக் கழகத்தின் சட்டபீட மாணவனுமான திரு சு.காண்டீபன் அவர்கள் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய இளைஞர் கழகமானது வட-கிழக்கு பகுதிகள் எங்கும் மக்களுக்காக தொடர்ந்து மக்கள் சேவையுடன் தனது பணிகளை முன்னெடுக்கும் கழகம், மாணவர்களின் நலன் கருதி கடந்த மூன்று வருடங்களாக நூற்றுக்கணக்கான பாடசாலைகளின் கல்வி, இணைபாடவிதான செயற்பாடுகளில் எமது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றமை, பல முன்பள்ளி சிறார்களினதும் முன்பள்ளியினதும் அபிவிருத்தி பணிகளில் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை, முதியோர் சிறுவர் இல்லங்களிற்கான உதவிகளுடன், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை வழங்கியமை, மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கியமை.

பல இரத்ததான முகாம்களை நடாத்தியமை, விளையாட்டு கழகங்களிற்கான அனுசரணைகளுடன் உதவிகள் வழங்கியமை, போரால் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் அவசர நலன் கருதி தகரங்கள் வழங்கியமை, இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கான உடனடி உதவிகளை மற்றும் நிவாரண பணிகளில் செயற்பட்டமை, உதாரணமாக கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கபட்ட மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நிவாரண பணிகள் மற்றும் வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கியமை, காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களில் தொடர்ந்தும் பங்கு பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு தொடர்ந்து செயற்படும் எமது கழகம், மக்களின் நலன் கருதி இம் முறை நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் , வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்யாமலும், வாக்களிக்கத் தயங்காமலும் தமிழ் மக்கள் தமது முழுமையாக வாக்குகளைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தில் இம் முறையும் தமிழர் தேசியத்தின் பிரதிநிதித்துவம் பலமானதொன்றாக அமைய வழிசெய்வது சமகாலத்தில் முதன்மையான கடமையாகும்.

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே எமது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து தமிழர்கள் ஒரு கண்ணியமான, நேர்மையான அரசியலையே நாடி நிற்கின்றார்கள் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும். இந்நிலையில் எமது இளைஞர் கழகம் முன்வைக்கின்ற கோரிக்கைகள் பின்வருமாறு,

1- வேலையற்ற பட்டதாரிகளின் பக்கச் சார்பற்ற உடனடி வேலைவாய்ப்பிற்கு வழிவகுத்தல்
2- இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்துறை சார்ந்த பொருளாதார வலயங்களை வட-கிழக்கில் உருவாக்குதல்.
3- சமூகத்தில் இளைஞர்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளுடன், இளைஞர்களின் சமூக பொறுப்பை அதிகரித்தல்.
4- பிரதேச இளைஞர் கழகங்களின் ஊடாக திறமையான இளைஞர்களை இளைஞர் பாராளுமன்றம் அனுப்ப பாடுபடல்.
5- உள்ளூராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களில் தகுதியான இளைஞர்களை சமூகத்திற்கு அறிமுகம் செய்தல்.

மேற்படி எமது ஐந்து அம்ச கோரிக்கைகளுக்கு செயல் வடிவம் வழங்கக் கூடிய நம்பிக்கைக்குரிய யாழ் தேர்தல் மாவட்ட(கிளிநொச்சி, யாழ்ப்பாணம்) வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வீட்டுச் சின்னத்தில் வெற்றி இலக்கம் 7 இலும்,

வன்னி தேர்தல் மாவட்ட(வவுனியா, மன்னார், முல்லைத்தீவு) வேட்பாளரான வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் வீட்டுச் சின்னத்தில் வெற்றி இலக்கம் 4 இலும்.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளரான ஆசிரியர் திரு. எஸ்.எஸ் அமல் என்கிற சதாசிவம் வியாளேந்திரன் அவர்கள் வீட்டுச் சின்னத்தில் வெற்றி இலக்கம் 7 இலும்

போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதன் மூலம் எமது இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இவர்களின் மூலம் நிச்சயமாக தீர்வு கிடைக்கும் என்பதில் எமது கழகத்தின் செயற்குழுவுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இன்றையதினம் எமது கழகத்தின் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவில் இவர்களுக்கான ஆதரவை வழங்குகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழகத்தினர் ஆகிய நாம் ஆதரவு தெரிவிப்பதன் பிரதான சில காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

• யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு 240 பரப்பு காணி வழங்கி, இன்றும் வடக்கின் கல்விச் சமூகத்தின் தமிழ் ஆசிரிய மாணவர்களுக்கான தேவை கருதி செயற்பட்டமை.
• வவுனியாவின் எல்லைக்கிராமங்களில் தமிழ் மக்களின் குடியேற்றங்கள் மூலம் எமது எல்லைகள் பாதுகாக்கப்பட்டமையும், பல குடியேற்றங்களை துரித கதியில் மக்களுக்காக உருவாக்கி, மக்களின் மகத்தான கௌரவத்தை பெற்றமையும்
• வன்னியின் அறிவொளியாக நூலகத்தினை உருவாக்கியதுடன், கிராமங்கள் தோறும் சிறிய படிப்பகங்கள் பலவற்றை உருவாக்கியமை.
• வன்னியின் கலாசாரத்தின் பிரதிவிம்பமான பெரியார்களின் சிலைகளை நகரெங்கும் நிறுவி, கிராம அபிவிருத்தி சங்கங்களின் பராமரிப்பிற்காய் நகரசபையால் வழங்கப்பட்டமை.
• கிராமங்கள் தோறும் தாய்-சேய் நிலையங்களை உருவாக்கி எமது இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தியமை.
• சமூகத்தின் தேவை கருதி அனைத்துக் காலங்களிலும் தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்காக முன்நின்று உழைத்தமை.
• அரசியல் பிரதிநிதித்துவங்கள் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் மக்களையும், மண்ணையும் பாதுகாத்து அபிவிருத்தியை முன்னெடுத்தமை
• பரிபூரணமான அர்ப்பணிப்பு, சுயநலமற்ற அரசியற்பணி, பண்பட்ட கண்ணியமான அரசியல் தலைமை, நேர்மையான நிர்வாகம், நீண்டகால போராட்ட அனுபவம், பாரபட்சமற்ற சமூக மேம்பாடு என்பவற்றை நடைமுறையில் கைக்கொள்ளும் தன்மை

ஆகவே, இத்தகைய உறுதியான அரசியல்நிலைப்பாடு, வியாபார நலன்களற்ற ஆதாயமற்ற அரசியற்பணி, பாரபட்சமற்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் என்பவற்றை வரிந்து கொண்டவர்களால் மட்டுமே எமது சமூகத்திற்கு முழுமையான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கமுடியும். அவ்வாறான தலைமைத்துவம் ஒன்றே பண்பாட்டு சீரழிவுகளை எதிர்நோக்கியுள்ள எமது சமூகத்தை எதிர்காலத்தில் தூக்கி நிறுத்தவும் உதவும் என்பதை கருத்திற்கொண்டு நாம் எமது ஆதரவினை வழங்குகின்றோம்.
நன்றி.

திரு சு.காண்டீபன்,
தலைவர்,
தமிழ் தேசிய இளைஞர் கழகம்.


aaaaaa
ccccc