Header image alt text

போர்க் குற்றவாளிகளை கூட்டிலேற்ற தமிழர்களே ஒன்றுபட்டு வாக்களியுங்கள்
                                                 –   தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள்
tna (4)ராஜபக்சவின் கொடூர ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்க வேண்டுமென அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தவறாது வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட்) தலைவர்கள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். இதேவேளை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

Read more

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிதம்பரபுரம் மக்கள் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)

IMG_1082தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) வவுனியா சிதம்பரபுரம் மக்களின் அழைப்பின் பேரில் நேற்று (09.08.2015) கிராம மக்களை சந்தித்து, மக்களின் இன்னல்கள் மற்றும் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இவ் கலந்துரையாடலில் மக்கள், தாம் தங்களால் குடியமர்த்தப்பட்டவர்கள் என்பதனால் இதுவரை காலமும் அபிவிருத்திப் பணிகளில் முற்றாக ஒதுக்கப்பட்டவர்களாக நாம் இருந்ததை தாங்கள் நன்கு அறீவீர்கள், அந்த வகையில் எமது குடியேற்றத்தினை உருவாக்கியவர்கள் நீங்கள் என்ற ரீதியில் இன்று தங்களை அழைத்து நாம் எமது கிராமத்தின் குறைகள் குறித்து கலந்துரையாடியதாக சிதம்பரபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more