கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிதம்பரபுரம் மக்கள் சந்திப்பு-(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) வவுனியா சிதம்பரபுரம் மக்களின் அழைப்பின் பேரில் நேற்று (09.08.2015) கிராம மக்களை சந்தித்து, மக்களின் இன்னல்கள் மற்றும் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இவ் கலந்துரையாடலில் மக்கள், தாம் தங்களால் குடியமர்த்தப்பட்டவர்கள் என்பதனால் இதுவரை காலமும் அபிவிருத்திப் பணிகளில் முற்றாக ஒதுக்கப்பட்டவர்களாக நாம் இருந்ததை தாங்கள் நன்கு அறீவீர்கள், அந்த வகையில் எமது குடியேற்றத்தினை உருவாக்கியவர்கள் நீங்கள் என்ற ரீதியில் இன்று தங்களை அழைத்து நாம் எமது கிராமத்தின் குறைகள் குறித்து கலந்துரையாடியதாக சிதம்பரபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.