Header image alt text

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்- (படங்கள் இணைப்பு)-

IMG_2171தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10.08.2015)மாலை வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ்மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்கள். இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், 1990ம் ஆண்டு வவுனியா நகரத்திலிருந்து அனைவருமே துரத்தப்பட்ட நிலையில், அந்நாளிலே இங்த மேடையிலே இருக்கின்ற சிலர் உட்பட நாங்கள் பதுங்கு குழிகளுக்குள் சென்று மக்களை ஒவ்வொருவராக கூட்டிவந்து அவர்களது வீடுகள் வளவுகளில் இருந்த கண்ணிவெடிகள் எல்லாம் துப்புரவு செய்து வீடு வீடாகக் குடியேற்றினோம். அது மாத்திரமன்றி கரையோரக் கிராமம் என்ற ரீதியில் மிகப்பெரியளவில் இரத்தம் சிந்தி பல உயிர்களையும் பலிகொடுத்து இந்த வவுனியாவைச் காப்பாற்றி இன்றைக்கு வவுனியாவை ஒரு தமிழ் நகரமாக வைத்திருக்கின்றோம். இந்தப் பணிகளைச் செய்தவர்களில் சிலரும் இந்த மேடையிலேயே வீற்றிருக்கின்றனர் என்று க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வன்னி மாவட்ட வேட்பாளர் க.சிவநேசன் (பவன்), ஜி.ரி.லிங்கநாதன்(விசு) ஆகியோர் அமர்ந்திருந்த திசையைப் பார்த்தபடி கூறினார். 

Read more

Voting is our Birth Rights  “Sri Lanka Progress with Her People” Election 2015

PLOTEvWe encourage every one to VOTE (unless any personal unavoidable circumstances preventing them .) Its an individual Birth  Rights  to Vote, if they don’t Vote then they don’t have any Say or Rights to Criticize the political changes and the polices implemented by the winners who make the government. 
 
Sri Lanka  is a Independent Free Democratic Country. For Majority  Tamils and Minority Muslims +  Singhalese  feel its not free democratic Country  not giving Equality and Political Freedom  as they wished, but their are some Tamils,  Majority Singhalese and Muslims  feel its a free democratic country.  
 
2015 August Election is a free election called by the new Government.  We strongly wish and believe every one will take part and support their own party as part of Democracy. 

Read more

பெரும்பான்மை கட்சிகள் ஆட்சியமைக்க முட்டுக்கொடுப்பது எமது நோக்கமல்ல-புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிப்பு- (ஆர்.ராம்)

D.Sithadthanபெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு முட்டுக்கொடுப்பது எமது நோக்கமல்ல எனத் தெரிவித்திருக்கும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு மைல் கல்லாக இந்த பொதுத் தேர்தல் அமைந்துள்ளதென குறிப்பிட்டார்.

நீர்வேலியில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் குழப்பகரமான அரசியல் சூழலொன்று காணப்படுகின்றது. இந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்தவுடன் பெரும்பான்மைக் கட்சிகள் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையொன்றே பெரும்பாலும் ஏற்படுமென எதிர்வு கூறப்படுகின்றது.

அவ்வாறான நிலையில் தமிழ் தேசியத்தின்பால் உரிமைகளுக்காக எமது மக்களின் ஆணைபெற்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு முட்டுக்கொடுக்காது. நீண்டகாலமாக எமது விடுதலைக்காக நாம் அறவழியிலும், ஆயுதவழியிலும் போராடி வருகின்றோம். 

Read more

கிளிநொச்சியில் கழகத் தோழர்களின் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார ஒன்றுகூடல்-(படங்கள் இணைப்பு)

09.08.2015 (1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கிளிநொச்சி மாவட்டத் தோழர்களின்; பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார ஒன்றுகூடல் நேற்று முன்தினம் (09.08.2015) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கல்விக்கு கைகொடுப்போம், நலிந்தோர்க்கு வாழ்வளிப்போம் என்னும் தொனிப்பொருளோடு இந்த ஒன்றுகூடல் ஆரம்பமானது.

இதன்போது தேசத்தின் விடுதலைக்காக மரணித்த அத்தனை உள்ளங்களோடும், சிறப்பாக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர்களான நந்தன், கோன் போன்றவர்களையும் நினைவுகூர்ந்து மௌனப் பிரார்த்தனையுடன் கூட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து கூட்டத்தினை தோழர் ராஜன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதன்போது முக்கியமாக எதிர்காலத்தில் எமது அமைப்பின் வளர்ச்சி பற்றியும், எம்மாலும், புலம்பெயர் தேசங்களிலுள்ள எம் உறவுகளின் பங்களிப்போடும் கல்வி கற்பதற்கான உதவிகளையும் கஸ்டமுறும் மாணவர்களுக்கும் அதிக வறுமை நிலையில் வாழ்பவர்களுக்கும் உதவிகளைச் செய்தல் என்ற விடயங்களை உள்ளடக்கி இக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Read more