கிளிநொச்சியில் கழகத் தோழர்களின் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார ஒன்றுகூடல்-(படங்கள் இணைப்பு)

09.08.2015 (1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கிளிநொச்சி மாவட்டத் தோழர்களின்; பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார ஒன்றுகூடல் நேற்று முன்தினம் (09.08.2015) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கல்விக்கு கைகொடுப்போம், நலிந்தோர்க்கு வாழ்வளிப்போம் என்னும் தொனிப்பொருளோடு இந்த ஒன்றுகூடல் ஆரம்பமானது.

இதன்போது தேசத்தின் விடுதலைக்காக மரணித்த அத்தனை உள்ளங்களோடும், சிறப்பாக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர்களான நந்தன், கோன் போன்றவர்களையும் நினைவுகூர்ந்து மௌனப் பிரார்த்தனையுடன் கூட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து கூட்டத்தினை தோழர் ராஜன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதன்போது முக்கியமாக எதிர்காலத்தில் எமது அமைப்பின் வளர்ச்சி பற்றியும், எம்மாலும், புலம்பெயர் தேசங்களிலுள்ள எம் உறவுகளின் பங்களிப்போடும் கல்வி கற்பதற்கான உதவிகளையும் கஸ்டமுறும் மாணவர்களுக்கும் அதிக வறுமை நிலையில் வாழ்பவர்களுக்கும் உதவிகளைச் செய்தல் என்ற விடயங்களை உள்ளடக்கி இக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

பிரித்தானியாவில் வசிக்கும் கண்டாவளையைச் சேர்ந்த எமது அமைப்பின் மூத்த தோழர் காந்தி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எமது அமைப்பின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், செயலாளர் திரு. சு.சதானந்தம் அவர்களும் எமது அமைப்பின் ஜேர்மன்கிளைத் தோழர் ஜெகநாதன் அவர்களும் மற்றும் பல மூத்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வழங்கியதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் நலிவுற்றோருக்கான வாழ்வுக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்கள்.

தொடர்ந்து எமது அமைப்பின் எதிர்கால இருப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது அமைப்பின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற யாழ். கிளிநொச்சி மாவட்ட வேட்பாளராகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு 07ஆம் இலக்கத்திற்கும், வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களுக்கு 04ஆம் இலக்கத்திற்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற எஸ் வியாளேந்திரன் (அமல் மாஸ்டர்) அவர்களுக்கு 07ஆம் இலக்கத்திற்கும் எம் உறவுகள் அதிகமான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, கலந்துகொண்ட, உதவிபுரிந்த அத்தனை தோழர்களுக்கும் நன்றியுரைத்து கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

09.08.2015 (2)09.08.2015 (3)09.08.2015 (1)